
Covid 19
கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் கோவிட் -19 ஒரு தொற்று நோயாகும். இந்த வைரஸ் முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் கண்டறியப்பட்டது. சில மாதங்களில் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. உலக அளவில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். குறிப்பாக கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது அலையில் பலர் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்களை இழந்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனா உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தாக்குதலை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து மற்றும் இந்தியா என பல்வேறு நாட்களில் கொரோனா பரவல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில், உலக சுகாராத நிறுவனமானது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தது. உலக சுகாராத நிறுவனம் கொரோனாவின் பல புதிய வகைகள் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளது. இவற்றில், NB.1.8.1, JN.1 மற்றும் KP.2 போன்றவை ஓமிக்ரானின் துணை வகைகளாகும். NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா சீனா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் கொரோனா NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய இரண்டு துணை வகைகள் இந்தியா உட்பட பல நாடுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனா தொற்று விரைவாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொடர்பான தகவல்களை இங்கு காணலாம்.
கொரோனா-இன்ஃப்ளூயன்ஸா ஒரே பரிசோதனை: அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை
Dual Testing for COVID-19 and Influenza: காய்ச்சல் அதிகரிப்பை முன்னிட்டு, ஒரே மாதிரியில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவுக்கான பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது. இது நோயறிதலை விரைவாக்கி, சிகிச்சை முறையை எளிமைப்படுத்துகிறது. மாநிலம் முழுவதும் இந்த நடைமுறை விரைவில் அமல்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jul 14, 2025
- 15:04 pm
கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிக்கிறதா? – ஐஎம்சிஆர் விளக்கம்
Covid 19 Vaccine: கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் வயதானவர்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் விளக்கம் அளித்துள்ளன. விரிவான ஆய்வுகளின் படி, தடுப்பூசி மற்றும் மாரடைப்பு இடையே எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 2, 2025
- 18:18 pm
பிரதமர் மோடியை சந்திக்க கெடுபிடி.. அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு.. என்ன மேட்டர்?
India covid Cases : பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு கொரோனா ஆர்டி பிடிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 11ஆம் தேதியான இன்று பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் உட்பட 70 பாஜக நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்
- Umabarkavi K
- Updated on: Jun 11, 2025
- 13:36 pm
COVID-19 Cases in India: இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. உச்சத்தில் கேரளா! இன்று மட்டும் இவ்வளவு பாதிப்பா..?
Coronavirus India June 2025: ஜூன் 10, 2025 அன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 324 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,815 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 68 ஆகவும் உயர்ந்துள்ளது. கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகம். மத்திய சுகாதார அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Jun 10, 2025
- 19:41 pm
இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா வைரஸ்.. 6,815 பேர் பாதிப்பு.. கேரளாவில் நிலைமை மோசம்!
India Covid Cases : நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 6,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது
- Umabarkavi K
- Updated on: Jun 10, 2025
- 11:48 am
India’s COVID-19 Surge: இந்தியாவில் அதிகரிக்கும் புதிய மாறுபாடு.. 6,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் பொதுமக்கள்!
New COVID-19 XFG Variant in India: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஜூன் 9, 2025 அன்று, 6491 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். புதிய XFG மாறுபாடு 163 பேரில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிக பாதிப்புகள் உள்ளன. சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- Mukesh Kannan
- Updated on: Jun 9, 2025
- 20:46 pm
India COVID-19 Update: இந்தியாவில் 6000 ஐ கடந்த கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்! எச்சரிக்கும் மத்திய அமைச்சகம்..!
India Coronavirus Deaths: இந்தியாவில் கொரோனா தொற்று 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 65. கேரளா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் அதிக பாதிப்பு. மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் தயார்நிலை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- Mukesh Kannan
- Updated on: Jun 8, 2025
- 19:22 pm
கொரோனாவை விட மோசமான தொற்றுநோய் வரலாம் – அமெரிக்க விஞ்ஞானி எச்சரிக்கை
Deadly Fungus Alert : கொரோனாவை விட மோசமான பாதிப்பு ஏற்படக் கூடும் என அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்திருக்கிறார். புதிதாக ஏற்படும் பூஞ்சை பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாமல் பயிர்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அமெரிக்க விஞ்ஞானி கார்டன் சி. சாங் என்பவர் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- Karthikeyan S
- Updated on: Jun 8, 2025
- 16:24 pm
Corona: கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போதைய வைரஸ் பலவீனமானது எனவும், முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும் பொது இடங்களில் அணிவது நல்லது எனவும் தெரிவித்துள்ளார். அரசு போதிய ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகள் தயார் நிலையில் வைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 7, 2025
- 20:36 pm
Covid Updates: கொரோனாவால் விழுப்புரம் இளைஞர் பலி.. சுகாதாரத்துறை விளக்கம்!
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் கொரோனா பாதித்த 35 வயது நபர் உயிரிழந்தார். இறந்த தியாகராஜனுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்ததாகவும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இதய செயலிழப்பால் இறந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 6, 2025
- 19:29 pm
Covid 19: அதிகரிக்கும் கொரோனா.. கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக களம் கண்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 6, 2025
- 16:10 pm
வதந்தி: கொரோனாவுக்கு நாட்டு மருந்து? தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!
Tamil Nadu COVID-19 Fake Remedy Alert: சமூக வலைத்தளங்களில் கொரோனாவுக்கு நாட்டு மருந்து எனப் பரவும் தவறான தகவலை தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது. மிளகு, தேன், இஞ்சி கலவை கொரோனாவைத் தடுக்கும் என்கிற தகவல் 2018-ம் ஆண்டு சளி மருந்தாக வெளியானதுதான் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jun 6, 2025
- 13:00 pm
வேகமெடுக்கும் கெரோனா.. 5 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. தமிழகத்தில் எத்தனை?
India Covid Cases : நாட்டில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்துள்ளது. தற்போதை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் 5,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகதாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் மட்டும் 1,684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- Umabarkavi K
- Updated on: Jun 6, 2025
- 12:56 pm
நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: ஒரே நாளில் 564 பேருக்கு பாதிப்பு
Covid Spike in India : இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜூன் 5, 2025 அன்று ஒரே நாளில் 564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை யாருக்கும் ஏற்படவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- Karthikeyan S
- Updated on: Jun 5, 2025
- 20:02 pm
பள்ளிகளில் முகக் கவசம் கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Covid Cases : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் முகக் கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Jun 4, 2025
- 13:53 pm