Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

பிரதமர் மோடியை சந்திக்க கெடுபிடி.. அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு.. என்ன மேட்டர்?

India covid Cases : பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு கொரோனா ஆர்டி பிடிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 11ஆம் தேதியான இன்று பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் உட்பட 70 பாஜக நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்

பிரதமர் மோடியை சந்திக்க கெடுபிடி.. அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு.. என்ன மேட்டர்?
பிரதமர் மோடி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Jun 2025 13:36 PM

டெல்லி, ஜூன் 11 : பிரதமர் மோடியை  (pm modi) சந்திக்கும் அமைச்சர்களுக்கு கொரோனா  (covid cases India) ஆர்டி பிடிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்தியா டுடே வெளியிட்ட தகவலின்படி, பிரதமர் மோடியை 2025 ஜூன் 11ஆம் தேதியான இன்று மாலை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ள டெல்லி முதல்வர் ரேகா குப்தா, எம்.பிக்கள் 7 பேர், எம்எல்ஏக்கள் உட்பட டெல்லியைச் சேர்ந்த சுமார் 70 பாஜக நிர்வாகிகள் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.  2025  மே மாதத்தில்    இருந்தே இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று

இந்தியாவில் 4 புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அவை LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 என்று தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் இதுவரை 7,121 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 2,223 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேற்கு வங்கத்தில் 747, உத்தர பிரதேசத்தில் 229 பேரும், தமிழகத்தில் 204 பேரும், ராஜஸ்தானில் 138 பேரும், மகாராஷ்டிராவில் 615 பேரும், கர்நாடகரிவில் 459 பேரும், குஜராத்தில் 1,223 பேரும், டெல்லியல் 757 பேரும், ஆந்திராவில் 72 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 3 பேரும், கர்நாடகாவில் 2 பேரும், மகாராஷ்டிராவில் 1 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால்  60 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி சந்திக்க கொரோனா பரிசோதனை கட்டாயம்


கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி சந்திக்க வரும் அமைச்சர்கள் கட்டாயம் கொரோன பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூன் 11ஆம் தேதியான இன்று மாலை பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, 7 எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 70 பாஜக நிர்வாகிகள் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்  என கூறப்படுகிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அனைத்து மாநிலக் கட்சித் தலைவர்களையும் இரவு 7.30 மணிக்கு இரவு உணவிற்கு அழைத்துள்ளனர்.  இதற்கு முன்னதாக, அவர்களுக்கு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். எனவே, வரும் நாட்களில் பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...