Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

COVID-19 Cases in India: இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. உச்சத்தில் கேரளா! இன்று மட்டும் இவ்வளவு பாதிப்பா..?

Coronavirus India June 2025: ஜூன் 10, 2025 அன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 324 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,815 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 68 ஆகவும் உயர்ந்துள்ளது. கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகம். மத்திய சுகாதார அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

COVID-19 Cases in India: இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. உச்சத்தில் கேரளா! இன்று மட்டும் இவ்வளவு பாதிப்பா..?
கொரோனா வைரஸ்Image Source: WHO
mukesh-kannan
Mukesh Kannan | Published: 10 Jun 2025 19:41 PM

டெல்லி, ஜூன் 10: இந்தியாவில் 2025 ஜூன் 10ம் தேதியான இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 324 புதிய கொரோனா தொற்று (India COVID-19 cases) பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் (Ministry of Health) தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளை பொறுத்தவரை, 2025ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா தொற்றா; ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இதில், இன்று அதாவது 2025 ஜூன் 10ம் தேதியில் மட்டும் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் ஜார்க்கண்டில் ஒரு உயிரிழப்பு இந்த ஆண்டு முதல் முறையாக பதிவாகியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின்படி, கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, கொரோனா தொற்றால் கர்நாடகாவில் இன்று அதாவது 2025 ஜூன் 10ம் தேதி 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் 129 பேரும், கேரளாவில் 96 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 9 பேரும், ஹரியானாவில் 8 பேரும், மகாராஷ்டிராவில் 6 பேரும், ஒடிசாவில் 5 பேரும், சத்தீஸ்கரில் 3 பேரும், ஜார்க்கண்ட் 2 பேரும், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தலா 1 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், மிசோரம், உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கொரோனா பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளி

கடந்த 2025 ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 7,644  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 783 பேர் 2025 ஜூனில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இதயம்,சிறுநீரக நோய்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் உட்பட முக்கிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா முதலிடம்:

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் தற்போது வரை கொரோனா தொற்றால் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, குஜராத்தில் அதிகபட்சமாக 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோன தொற்றால் பெரும்பாலும் கடலோரப் பகுதிகளை பாதிக்கும் NB.1.81 மற்றும் LF.7 போன்ற அதிக அளவில் பரவுகிறது என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். 2,053 பேர் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், JN.1 வகை காரணமாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

பீதி அடைய வேண்டாம்:

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. அதிகரிக்கும் உயிரிழப்புகள் காரணமாக நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் பீதி அடையத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...
அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் - அதிபர் டிரம்ப்
அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் - அதிபர் டிரம்ப்...