சென்னை டெக் மகிந்திரா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – பரபரப்பு தகவல்
காரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மே 15, 2026 அன்று டெக் மகிந்திரா நிறுவன வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கரும்புகையால் சூழப்பட்டிருந்தது.
சென்னை, மே 15 : சென்னை சோழிங்க நல்லூர் பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மே 15, 2026 அன்று டெக் மகிந்திரா நிறுவன வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கரும்புகையால் சூழப்பட்டிருந்தது. தீ வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் அங்கு பணியாள்றிய ஊழியர்கள் அலறியடித்தபடி கட்டத்தை விட்டு வெளியேறினர்.
சென்னை டெக் மகிந்திரா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
இந்த நிலையில் ஒரு சிலர் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக செயல்பட்டு கட்டிடத்திற்குள் இருந்தவர்களை மத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அவர்கள் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.




இதையும் படிக்க : அடிபம்பை ‘அப்படியே’ மூடி அமைக்கப்பட்ட சாலை… சேத்தியாதோப்பில் அரங்கேறிய அவலம்!
இந்த நிலையில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பு எற்பட்டது. அந்த கட்டிடத்தின் மின்சார பகிர்மான பெட்டிியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் எந்த வித உயிர் சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பது ஆறுதலாக அமைந்தது.
டெக் மகிந்திரா நிறுவனத்தின் தீ விபத்து ஏற்பட்ட காட்சிகள்
Tech mahindra on fire #tech_mahindra #firetechmahindra #firemahindra#elcot pic.twitter.com/wEaDE3eE5n
— Vasanth (@svasanth131999) May 15, 2026
ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான ஏசி பயன்பாடும் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்ந்து இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்தை சுற்றி கரும்புகை ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என கூறப்படுகிறது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : லட்டு பிரசாதத்தில் கோடிக் கணக்கில் மோசடி: ராமேசுவரம் கோவிலில் அம்பலமான பயங்கரம்!
ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரியும் ஐடி நிறுவனத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.