தந்தையின் வாட்ஸ்ஆப்-க்கு மாணவியின் அந்தரங்க வீடியோ.. ரூ.10 லட்சம் கேட்டு பகீரங்க மிரட்டல்.. 3 பள்ளி மாணவர்களை கம்பி எண்ண வைத்த போலீஸ்!
Krishnagiri 3 Students Arrested : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவியின் ஆபாச வீடியோவை அவரது தந்தையின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டதாக 3 பள்ளி மாணவர்களை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மேல் பகுதியில் 9- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், மாணவரின் வீட்டுக்கு அவரின் 2 பள்ளி நண்பர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாகும். அப்போது, வீட்டின் மேல் பகுதியில் வசித்து வரும் மாணவி குறித்து அந்த மாணவரிடம் சக மாணவர்கள் கேட்டுள்ளனர். அப்போது, வாடகை வீட்டில் வசிக்கும் அந்த மாணவர், அந்த மாணவியின் பேஸ் புக், இன்ஸ்டாகிராம், செல்போன் எண் உள்ளிட்டவை என்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது, மற்ற இரு நண்பர்கள் மாணவியின் செல்போன் எண் உள்ளிட்ட சமூக வலைதள கணக்கு விவரங்களை பெற்றுள்ளனர். பின்னர், அவர்கள் அந்த மாணவியின் சமூக வலைதள கணக்கில் இருந்து புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதனை ஆபாசமான முறையில் மார்பிங் செய்துள்ளனர்.
மாணவியின் மார்பிங் புகைப்படங்கள் அனுப்பினர்
பின்னர், அதனை போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி அந்த மாணவியின் இன்ஸ்டாகிராமுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி, அந்த மாணவர்களிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது, அந்த மாணவர்கள் இந்த புகைப்படத்தை உனது தந்தையிடம் அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. மேலும், இந்த புகைப்படத்தை உனது தந்தையிடம் அனுப்ப வேண்டாம் என்றால் தன்னை ஆடை இன்றி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கொடூரமான முறையில் மிரட்டி உள்ளனர்.
மேலும் படிக்க: நண்பர்களே எமனாக மாறிய கொடூரம்.. போதை தகராறில் கத்திக்குத்து.. தீவிர சிகிச்சையில் உயிரிழந்த மீனவர்!




மாணவியின் ஆபாச வீடியோவை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்பு
இதனால், அச்சமடைந்த அந்த மாணவி தன்னை ஆபாசமான முறையில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அந்த மாணவர்களுக்கு அனுப்பி உள்ளார். இதனை, மாணவியின் தந்தையின் சமூக வலைதள கணக்குக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், அவருக்கு சமூக வலைதளத்தில் கணக்கு இல்லாத காரணத்தால் அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி ரூ.10 லட்சம் தருமாறு மிரட்டில் விடுத்துள்ளனர். இதை பார்த்த மாணவியின் தந்தை கடும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
3 மாணவர்களை கைது செய்த போலீசார்
பின்னர், அந்த செல்போன் எண் தொடர்பாக விசாரித்ததில், அந்த எண் தனது கீழ் வீட்டில் வசிக்கும் மாணவருடையது தெரியவந்தது. பின்னர், இது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பள்ளி மாணவர்களை கைது செய்து சேலம் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மேலும் படிக்க: ஓய்வு பெற்ற எஸ்ஐ மகள் கொன்று புதைப்பு.. கள்ளத் தொடர்பால் காண்டிராக்டர் மனைவி கொடூர செயல்.. தூத்துக்குடியில் அதிரவிடும் சம்பவம்!