AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிஜிபி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Ips Officers Transfers : தமிழகத்தில் உளவுத்துறை டி ஜி பி பால நாக தேவி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறப்பித்துள்ளார்.

டிஜிபி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 14 May 2026 19:35 PM IST

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசு துறைகளில் உயர் பதவிகள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர், உளவுத்துறை ஐஜி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறப்பித்துள்ளார். இதில், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த விவரம் பின்வருமாறு:

நுண்ணறிவு பிரிவு டிஜிபி பணியிட மாற்றம்

நுண்ணறிவு பிரிவு டிஜிபியாக இருந்த பால நாகதேவி ஐபிஎஸ் சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜி யாக இருந்த ஜி. தர்மராஜன் ஐ. பி. எஸ். உளவுத்துறை பாதுகாப்பு – 1 டிஐஜி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெருநகர சென்னையின் தெற்கு பகுதி சட்ட ஒழுங்கு டிஐஜி யாக இருந்த பகலா செபாஸ் கல்யாணம் ஐ.பி.எஸ். உளவுத்துறை உள் பாதுகாப்பு டிஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. யாக பணிபுரிந்த சரவணன் ஐ.பி.எஸ். சென்னை சி.ஐ.டி. உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: 21 வயது கீழ் இருப்பவர்களுக்கு மது பாட்டில் கிடையாது.. மீறினால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம்…

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த மயில்வாகன் ஐ. பி. எஸ். சென்னை சிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மதன் ஐ. பி. எஸ். சென்னை சிஐடி பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கியூ பிரான்ச் சி. ஐ. டி. காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சண்முகம் சென்னை சி. ஐ. டி. சிறப்பு பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரைம் பிரான்ச் ஜி.எஸ்.மாதவன் பணியிட மாற்றம்

இதேபோல, சென்னை மெட்ரோ பகுதி கிரைம் பிரான்ச் காவல் கண்காணிப்பாளரான ஜி. எஸ். மாதவன் சென்னை சிறப்பு பிரிவு சி. ஐ. டி. கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சட்டம் – ஒழுங்கு ஏ.ஐ.ஜி- ஆக பணிபுரிந்த சிலம்பரசன் சிறப்பு பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு.. அசுர வேகத்தில் நிதியை விடுவித்த முதல்வர் விஜய்!!

Follow Us