AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓய்வு பெற்ற எஸ்ஐ மகள் கொன்று புதைப்பு.. கள்ளத் தொடர்பால் காண்டிராக்டர் மனைவி கொடூர செயல்.. தூத்துக்குடியில் அதிரவிடும் சம்பவம்!

Thoothukudi Crime : தூத்துக்குடி மாவட்டத்தில் கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை அவரது மனைவி தலையணையால் அமுக்கி கொலை செய்ததுடன், தோட்டத்தில் குழி தோண்டி புதைத்ததாகவும் இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற எஸ்ஐ மகள் கொன்று புதைப்பு.. கள்ளத் தொடர்பால் காண்டிராக்டர் மனைவி கொடூர செயல்.. தூத்துக்குடியில் அதிரவிடும் சம்பவம்!
மாதிரிப் புகைப்படம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 14 May 2026 17:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் செல்லதுரை ( 62 வயது). இவர், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் பிருந்தா தேவி. இவருக்கும் கிருஷ்ணகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற பிருந்தா தேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த செல்லதுரை உறவினர் வீடு, அக்கம் பக்கம் உள்ளிட்ட இடங்களில் தேடினார். ஆனால், பிருந்தா தேவியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்தால் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய குற்றவாளிகள்

இதில், பிருந்தா தேவி அவரது வீட்டின் அருகே உள்ள மாரிமுத்து என்பவரை வீட்டுக்கு சென்றதும், அதன் பின்னர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என்பதும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, மாரிமுத்து மற்றும் அவரது மனைவி சரவண பிரியா ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், பிருந்தா தேவி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் படிக்க: https://www.tv9tamilnews.com/tamil-nadu/voting-by-overseas-citizens-in-tamil-nadu-elections-3-individuals-caught-at-chennai-airport-arrested-78413.html

காண்டிராக்டருடன் திருமணத்தை மீறிய உறவு

இது தொடர்பாக அவர்கள் அளித்த அதிர்ச்சியான வாக்குமூலம் பின்வருமாறு: மாரிமுத்து கட்டிட காண்ட்ராக்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். மாரிமுத்துவின் வீட்டுக்கு பிருந்தா தேவி அடிக்கடி சென்று வந்த காரணத்தால் இருவர் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சம்பவத்தன்று மாரிமுத்துவின் வீட்டில் பிருந்தா தேவி தனிமையில் பேசிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அப்போது, வீட்டுக்கு வந்த சரவணன் பிரியாவுக்கும், பிருந்தா தேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தலையணையால் அமுக்கி பெண் கொலை- தோட்டத்தில் புதைப்பு

இதில், இருவர் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் பிருந்தா தேவியே கீழே தள்ளி தலையணையால் அமுக்கி சரவண பிரியா கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, பிருந்தா தேவியின் சடலத்தை மாரிமுத்து, அவரது தம்பி கார்த்திக் ஆகியோர் உதவியுடன் சாக்கு மூட்டையில் கட்டி காரில் கொண்டு சென்று ஒட்டப்பிடாரம் சிலோன் காலணியில் உள்ள சொந்தமான இடத்தில் குழி தோண்டி புதைத்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து, மாரிமுத்து, அவரது மனைவி சரவண பிரியா இதுவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: “விரைவில் மகளிர் உரிமைத் தொகை”… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

Follow Us