Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jaipur Hospital Fire: அரசு மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து.. 6 பேர் பலி

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீயணைப்பு உபகரணங்கள் இல்லாதது, ஊழியர்கள் அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Jaipur Hospital Fire: அரசு மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து.. 6 பேர் பலி
தீ விபத்து
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 06 Oct 2025 07:54 AM IST

ராஜஸ்தான், அக்டோபர் 6: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் மாநில அரசின் கீழ் இயங்கும் சவாய் மான் சிங் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வருகை தருகின்றனர். இந்த மருத்துவமனையில் 2025, அக்டோபர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்தில் ஏற்பட்டது. இதனை அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளும், அவரின் குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லை. தீ மளமளவென பரவிய நிலையில் செய்வதறியாது திகைத்தனர். தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. உடைந்தது மண்டை ஓடு… மருத்துவமனையில் சிகிச்சை!

கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் ஓடிவிட்டதாக சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். புகை வேகமாக அந்த தளம் முழுவதும் பரவி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த தீ விபத்தில் பல்வேறு ஆவணங்கள், ஐ.சி.யூ உபகரணங்கள், இரத்த மாதிரி குழாய்கள் என பல பொருட்கள் தீக்கிரையாயின. தீயை கட்டுக்குள் கொண்டு வர சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. மருத்துவமனையின் பிற நோயாளிகள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். உடனடி சிகிச்சை தேவைப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட ஐசியு பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் மிக மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கோமா நிலையில் இருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் இருவர் பெண்கள் மற்றும் நான்கு பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து நோயாளிகள் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.  அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமி.. கையை வெட்டி எடுத்த மருத்துவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணையமைச்சர் ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் சம்பவம் நடந்த மருத்துவமனை வளாகத்தை நேரில் பார்வையிட்டனர். அப்போது தான் ​​தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவிட்டதாக பாதிக்கப்பட்ட இருவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மேலும் தீ பரவிய இரண்டாவது தளத்தில் தீயணைப்பு கருவிகள், மணல், சிலிண்டர்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. குறைந்தப்பட்சம் தீயை அணைக்க தண்ணீர் கூட இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தடயவியல் குழு சமர்பிக்கும் அறிக்கை அடிப்படையில் விசாரணை நடக்கும் என ஜெய்ப்பூர் காவல் ஆணையர் பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்துள்ளார்.