மகளை அடித்துக்கொன்ற தாய்.. தானும் தூக்கிட்டு தற்கொலை.. பெங்களூரில் பகீர் சம்பவம்!
Mother Kills 12-Year-Old Daughter and Her Self | கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெண் ஒருவர் தனது 12 வயது மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, அக்டோபர் 04 : கர்நடகாவில் (Karnataka) 12 வயது மகளை அடித்துக் கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுனியின் தாய் கடந்த சில மாதங்களாகவே மனநல பாதிப்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தாய் தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகளை அடித்து கொலை – தானும் தற்கொலை செய்துக்கொண்ட தாய்
கர்நாடகா மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ரமணா நாயக். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், பூர்விகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று ரமணா இரவு பணிக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை பணி முடித்து வீட்டுக்கு வந்த அவர், காலிங் பெல்லை தொடர்ந்து அடித்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கதினரின் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
இதையும் படிங்க : அரசு வேலைக்காக இப்படியா? பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. தாய் செய்த கொடூரம்!
ரத்த வெள்ளத்தில் கிடந்த மகள் – தூக்கில் தொங்கிய மனைவி
கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ரமணா வீட்டின் அறையில் மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மற்றொரு அறையில் அவரது மனைவி தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டு இருந்தது அவரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அது குறித்த முதற்கட்ட விசாரணை தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்திய விவசாயி.. மூட நம்பிக்கையின் உச்சத்தில் நடைபெற்ற சம்பவம்?
மனநல பாதிப்பில் இருந்த பெண் செய்த விபரீதம்
அதாவது, ரமணாவின் மனைவி தனது மகளை அடித்து கொலை செய்துவிட்டு பிறகு தானும் தற்கொலை செய்துக்கொண்டதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். ரமணாவின் மனைவி கடந்த சில மாதங்களாகவே மனநல பாதிப்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.