துபாயில் இருந்து வந்ததும் இப்படியா? மனைவியை கொன்ற கணவர்.. ஷாக் பின்னணி!
Bengaluru Crime News : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை கொடூரமாக குத்திக் கணவர் கொலை செய்துள்ளார். துபாயில் இருந்து வந்த மூன்று நாட்களில் மனைவியை, கணவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெங்களூரு, அக்டோபர் 01 : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை கொடூரமாக செய்து, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து வந்த உடனேயே மனைவியை கொடூரமாக கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் தர்மசீலன் ரமேஷ் (29). இவரது மனைவி மஞ்சு 927). இவர் நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார். தர்மசீலன் துபாயில் வேலை செய்து வந்தார். தர்மசீலனின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டமாகும். இவர்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து 2022ல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இரண்டு பேரும் பெங்களூருவில் வசித்து வந்தனர். மஞ்சுவின் தந்தை பெரியசாமியுடன் வசித்து வந்துள்ளனர். திருமணமானதில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. துபாயில் தர்மசீலன் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். மஞ்சு வேலைக்கு செல்வது தர்மசீலனுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில், வேலையை விட்டுவிட்டு துபாயில் இருந்து தர்மசீலன் வந்துள்ளார். மீண்டும், மஞ்சுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
Also Read : ஒன்னா, ரெண்டா.. ஊரையே ஏமாற்றிய 13 பேர் கொண்ட கும்பல்!




மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் வேலைக்கு செல்வது குறித்து மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இந்த தகராறு நீடித்த நிலையில், கத்தியை எடுத்து 8 முறை மனைவியை குத்திக் கொன்றுள்ளார். பின்னர், அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மகளை பார்க்க பெரியசாமி வீட்டிற்கு வந்தபோது, மஞ்சு கழுத்தறுக்கப்பட்ட நிலையில், படுக்கையில் கிடந்துள்ளது.
மேலும், அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் தர்மசீலன் இருந்துள்ளார். இதுகுறித்து அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
Also Read : சிக்கன் கறி கேட்ட சிறுவன்.. தாய் செய்த கொடூரம்.. பறிபோன உயிர்!
சமீபத்தில், பெங்களூரூ பேருந்து நிலையில் பெண் கொலை செய்யப்பட்டார். அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. ஹாசன் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (32). ரோக திருமணம் மீறிய உறவில் இருப்பதாக அவரது கணவர் சந்தேகப்பட்டு, சண்டை போட்டு வந்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் மகன் கண்முன்னே ரேகாவை அவரது கணவர் குத்திக் கொலை செய்து இருக்கிறார். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)