காதலிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்.. அடித்த கொன்ற காதலியின் குடும்பம்!
elangana Young Man Killed For WhatsApp Status | தான் காதலிக்கும் பெண்ணுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கிய நிலையில், அவரது காதலன் தான் அந்த பெண்ணை காதலிப்பாத வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத், செப்டம்பர் 29 : தெலங்கானாவில் (Telangana) காதலிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் (WhatsApp Status) வைத்த இளைஞரை, காதலியின் குடும்பத்தார் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக அந்த இளைஞர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தார் இந்த கொடூர சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
காதலிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்
தெலங்கானா மாநிலம் ரேசப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் என்ற 29 வயது இளைஞர். இவர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. அப்போது கடும் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சதீஷை அழைத்து மிரட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையையும் அவர்கள் தேட தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : முகத்தில் இருந்த கரும்புள்ளிகள்.. தான் அழகாக இல்லை என நினைத்து பெண் விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்!




யாரும் பெண் கேட்டு வரவேண்டாம் என அறிவித்த சதீஷ்
காதலியின் வீட்டார் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கிய நிலையில் அது குறித்து சதீஷ் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அவர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தான் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், யாரும் அவரை பெண் கேட்டு வர வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அவர்களின் காதல் விவகாரம் ஊருக்கே தெரிய வந்துள்ளது. ஆனால், இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அது மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. இதன் காரணமாக தங்கள் வீட்டு பெண்ணை காதலிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த சதீஷை அவர்கள் அடித்தே கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க : தாய் கண்முன்னே கொடூரம்.. 5 வயது சிறுவன் தலை துண்டித்து கொலை.. பகீர் பின்னணி!
இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.