Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனையிவின் நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை.. ஷாக் சம்பவம்!

Father Killed Children with Axe in Karnataka | கர்நாடகாவில் தனது மனைவி மீது சந்தேகத்தில் இருந்து வந்த கணவர் தனது இரண்டு குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை என கூறி வந்த அவர் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

மனையிவின் நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை.. ஷாக் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Sep 2025 07:42 AM IST

யாதகிரி, செப்டம்பர் 26 : கர்நாடகாவில் (Karnataka) பெற்ற தந்தையே குழந்தைகளை கோடாரியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த அவர், தனது குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை அஎன கூறி இந்த கொடூர செயலை செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள குழந்தைகளின் தந்தையை வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பெற்ற தந்தையே குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் – குழந்தைகளை கொலை செய்த தந்தை

கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சரணப்பா. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, ஹேமந்த், பார்கவ் என்ற இரண்டு மகன்களும், சான்வி என்ற ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில், சரணப்பா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து மனைவியை சிதர்வதை செய்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி அந்த குழந்தைகள் தனக்கு பிறந்தவர்கள் இல்லை என்றும் அவர் கூறி வந்துள்ளார்.

இதையும் படிங்க : ஆம்லெட் உடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட தொழிலாளி.. அடுத்த நடந்த விபரீதம்!

மனைவியையும், குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொடூரம்

சரணப்பா தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததன் காரணமாக அவரது மனைவி 1.5 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 1.5 ஆண்டுகளாக சரணப்பாவும் அவர்களை அழைத்து வராமலே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாமியார் வீட்டிற்கு சென்ற அவர் குழந்தைகளையும், மனைவியையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : மின்சார ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்த முதியவர்.. மின்சாரம் தாக்கி உடல் கருகிய பரிதாபம்!

மூன்று குழந்தைகளையும் கோடாரியால் வெட்டிய தந்தை

சரணப்பா மனைவி மற்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும் அவரது சந்தேகம் தீராமலே இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சரணப்பா மீண்டும் தனது மனைவியிடம் குழந்தைகள் யாருக்கு பிறந்தன என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அனைவரும் தூங்கிவிட்ட நிலையில், அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க அவரது மனைவி வெளியே எழுந்துச் சென்றுள்ளார்.

குழந்தைகள் நல்ல தூக்கத்தில் இருந்த நிலையில், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து சரணப்பா, மூன்று குழந்தைகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு சென்று பார்த்த அவரது மனைவி குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார். கோடாரியால் தாக்கியதில் சான்வியும், பார்கவும் பரிதாபமக உயிரிழந்துள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஹேமந்தை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சரணப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர்.