Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆம்லெட் உடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட தொழிலாளி.. அடுத்த நடந்த விபரீதம்!

Kerala Man Dies After Eating Banana and Omlet | கேரளாவை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் ஆம்லெட் உடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்லெட் உடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட தொழிலாளி.. அடுத்த நடந்த விபரீதம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Sep 2025 23:49 PM IST

காசர்கோடு, செப்டம்பர் 24 : கேரளாவில் (Kerala) ஆம்லேட்டுடன் வாழைப்பழத்தை சேர்த்து முழுமையாக சாப்பிட்ட கூலி தொழிலாளி மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பின்னர் ஆம்லெட்டுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டபோது அவருக்கு இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், வாழைப்பழம் சிக்கி தொழிலாளில் பலியானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆம்லெட் உடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட தொழிலாளி

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெந்தியடக்கா அருகே உள்ள பாருடக்கா என்ற பகுதியை சேர்ந்தவர் விஷாந்த் டிசோசா. 52 வயதான இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் சாலையோர கடை ஒன்றில் உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் அதே கடையில் ஆல்மெட் உடன் முழு வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : மின்சார ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்த முதியவர்.. மின்சாரம் தாக்கி உடல் கருகிய பரிதாபம்!

மூச்சுத்திணறி பரிதாபமாக பலியான கூலித் தொழிலாளி

கூலித் தொழிலாளில் ஆம்லெட்டுடன் முழு வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட நிலையில், சற்று நேரத்திலேயே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : நகத்தால் கீறிய வளர்ப்பு நாய்.. அடுத்த 5 நாட்களில் பலியான காவல் ஆய்வாளர்.. சோக சம்பவம்!

கூலித் தொழிலாளியின் இறப்புக்கு இதுதான் காரணம் – மருத்துவர்கள் சொன்ன விளக்கம்

கூலித் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக விளக்கமளித்த மருத்துவர்கள் ஆம்லெட் மற்றும் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதன் காரணமாக தான் அந்த நபர் தொண்டையில் வாழைப்பழம் மற்றும் ஆம்லெட் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இது அவரது குடும்த்தினர் மற்றும் ஊர் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதனை நிதானமாக நன்கு மென்று சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், ஆம்லெட்டையும் வாழைப்பழத்தையும் மொத்தமாக விழுங்கிய கூலித் தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.