Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கீழே கிளாஸ் ரூம்.. மேலே கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் உற்பத்தி.. சிக்கியது எப்படி?

Telengana Crime: ஹைதராபாத்தின் மேத்தா மேல்நிலைப் பள்ளியில், பள்ளி நிர்வாகி மலேலா ஜெயப்பிரகாஷ் கௌட் தலைமையில், முதல் தளத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் கடந்த ஆறு மாதங்களாக அல்ப்ராசொலாம் என்ற போதைப்பொருள் தயாரிப்பு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீழே கிளாஸ் ரூம்.. மேலே கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் உற்பத்தி.. சிக்கியது எப்படி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Sep 2025 20:49 PM IST

தெலங்கானா, செப்டம்பர் 14, 2025: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் பள்ளி ஒன்றில் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போதைப்பொருள் பழக்கம் மாணவர்கள், இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றின் கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் மேத்தா மேல்நிலைப் பள்ளியில், பள்ளி நிர்வாகி மலேலா ஜெயப்பிரகாஷ் கௌட் தலைமையில், முதல் தளத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் கடந்த ஆறு மாதங்களாக அல்ப்ராசொலாம் என்ற போதைப்பொருள் தயாரிப்பு நடைபெற்றுள்ளது.

கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் உற்பத்தி:

பள்ளி நடைபெறும் நேரங்களில், கீழ்தளத்தில் மாணவர்கள் வகுப்பறைகளில் பாடங்களை கவனித்து கொண்டிருக்க, முதல் தளத்தில் பள்ளி நிர்வாகி தலைமையிலான இருவர் இந்த போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டனர். திங்கள் முதல் வெள்ளி வரை கெமிஸ்ட்ரி லேபில் இந்த உற்பத்தி நடைபெற்றது. பின்னர் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த லேபில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க: பாட்டில் மூடியை விழுங்கிய சிறுவன்.. துடிதுடித்து இறந்து போன சோகம்..

நாளடைவில் இந்த போதைப்பொருளுக்கு தேவைகள் அதிகரித்ததால், ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக அந்த பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

லேபில் கைப்பற்றப்பட்ட 7 கிலோ போதைப்பொருள்:

அப்போது கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சோதனை நடத்தப்பட்டதில், சுமார் 7 கிலோ அல்ப்ராஸோலாம் எனப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், ரூபாய் 21 லட்சம் பணம், போதைப்பொருள் தயாரிப்பதற்கான பொருட்கள், உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க: தொடரும் மர்மம்.. கேரள காங்கிரஸை துரத்தும் தற்கொலைகள்.. பகீர் கிளப்பும் சிபிஎம்!

இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர், எங்கு எங்கு இந்த போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுபோதையில் காரை ஓட்டிய இளைஞர்:

கடலூரில் மதுபோதையில் இளைஞர் காரை கடலில் இறக்கி விஷப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளார். இதனால், காருக்குள் இருந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் சிக்கி கொண்டனர். இதனை அடுத்து மீனவர்களின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், காரையும் டிராக்டர் மூலம் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். நவீன காலத்திற்கு ஏற்ப கூகுள் மேப்பை அனைவரும் பயன்படுத்தி சென்று வருகின்றனர். கூகுள் மேப் காட்டும் வழியை நம்பியை பலரும் பயணித்து வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், கடலூர் இந்த சம்பவம் நடந்துள்ளது.