Uttar Pradesh : பள்ளி ஆசிரியை பின்தொடர்ந்து ஆசிட் வீசிய நபர் .. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
Acid Attack on School Teacher | உத்தர பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

லக்னோ, செப்டம்பர் 27 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) 22 வயது ஆசிரியை மீது ஆசிட் வீசப்பட்ட (Acid Attack) சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆசிரியை பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், அவரை வழிமறித்த நபர் ஒருவர் இந்த கொடூர செயலை செய்துள்ளார். இந்த நிலையில், பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டு இருந்த பள்ளி ஆசிரியை மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பள்ளி ஆசிரியை மீது ஆசிட் விசிய நபர் – உபியில் அதிர்ச்சி சம்பவம்
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள நகாசா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயது ஆசிரியை ஒருவர் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், சன்பவத்தன்று அவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை நிசு திவாரி என்ற 30 வயது நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து திடீரென ஆசிரியையின் மீது ஊற்றியுள்ளார். ஆசிட் பட்டதும் ஆசிரியை வலியால் அலறி துடித்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து பைக்கிள் தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : மனையிவின் நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை.. ஷாக் சம்பவம்!
கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
ஆசிட் வீசியதால் வலியால் அலறி துடித்த ஆசிரியை மீட்ட அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிசு திவாரியை போலீசார் வலை வீசி தேடிவந்துள்ளனர். போலீசாரின் இந்த தேடுதல் வேட்டையின் போது கல்யாண்பூர் அருகே போலீசாரை கண்டதும் குற்றவாளி தப்பியோட முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில், விரைந்து செயல்பட்ட போலீசார் துப்பாக்கி முணையில் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : நீட் தேர்வில் 99% மார்க்.. கல்லூரியில் சேரும்போது இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம்!
ஆசிரியை மீது ஆசிட் வீசிய அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியை மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.