Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீட் தேர்வில் 99% மார்க்.. கல்லூரியில் சேரும்போது இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம்!

NEET Student Suicide : மகாராஷ்டிராவில் மருத்துவ கல்லூரியில் சேரும் நாளில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் 99 சதவீத மதிப்பெண்கள் எடுத்தும், இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு மருத்துவராக விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீட் தேர்வில் 99% மார்க்..  கல்லூரியில் சேரும்போது இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம்!
தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Sep 2025 20:09 PM IST

மகாராஷ்டிரா, செப்டம்பர் 24 : மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் 99 சதவீத மதிப்பெண் வாங்கிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் மருத்துவராக விருப்பமில்லை என கூறி, கல்லூரியில் சேரும் முதல் நாளில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு காரணமாக, மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாரிக் கொண்டிருக்கும்போதே மாணவர்கள் சில விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, நீட் தேர்வில் 99 சதவீதம் மதிப்பெண் எடுத்தும், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான அனுராக் அனில் போர்கர் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சிண்டேவாஹி தாலுகாவில் உள்ள நவர்கானில் வசிக்கும் அனுராக், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் நீட் தேர்வில் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அகில இந்திய அளவில் 1475 மதிப்பெண் பெற்றார். இதனை அடுத்து, அவருக்கு உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அவருக்கு சீட் கிடைத்தது.

Also Read : லடாக்கில் வெடித்த வன்முறை.. பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. என்ன நடக்கிறது?

இளைஞர் எடுத்த விபரீத முடிவு

இதற்காக அவர் தயாராகி வந்தார். கோரக்பூருக்குச் செல்வதற்கு முன்பு அனுராக் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து ஒரு தற்கொலைக் கடிதமும் மீட்கப்பட்டது. அக்கடிதத்தில், மருத்துவராக விரும்பவில்லை என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : நகத்தால் கீறிய வளர்ப்பு நாய்.. அடுத்த 5 நாட்களில் பலியான காவல் ஆய்வாளர்.. சோக சம்பவம்!

பல இளைஞர்கள் தங்கள் படிப்பு மறறும் கல்வி வாழ்க்கையைப் பொறுத்தவரை மிகுந்த அழுத்தத்தை உணர்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி என்பது அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே, எல்லாமே அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்வது அவசியம். மன அழுத்தத்தை சிறப்பாகக் கையாள, இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தாங்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதைப் பற்றி வெளிப்படையாகப் பேச முயற்சிக்க வேண்டும்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)