லடாக்கில் வெடித்த வன்முறை.. பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. என்ன நடக்கிறது?
Ladakh Protest : லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின்போது, லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதனால், போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை களைக்க போலீசார் தடியடியும், புகை குண்டுகளையும் வீசியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

லடாக், செப்டம்பர் 24 : லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின்போது, லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதோடு, தீ வைக்கப்பட்டது. இதனால், லடாக் பகுதி வன்முறை களமாக மாறியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக லடாக் இருந்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டன. இதில் லடாக் பகுதி துணை ஜனாதிபதி கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கென சட்டப்பேரவை எதுவும் இல்லை.
இதனால், ஜம்மு காஷ்மீருக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என குரல் எழுந்திருந்த நிலையில், தற்போது லடாக்கிலும் அது எதிரொலித்துள்ளது. அதாவது, தனி மாநில அந்தஸ்து கோரி, 2025 செப்டம்பர் மாதத்தில் இருந்தே போராட்டங்கள் நடந்து வருகிறது. பழங்குடி அந்தஸ்து கோரி லேவிலும் போராட்டம் நடந்து வருகிறது. காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். லடாக்கை ஆறாவது அரசியலமைப்பு அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும், மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கோரி லேவில் லேவில் 15 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.




Also Read : 2 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய்.. மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் வெறிச்செயல்!
லடாக்கில் வெடித்த வன்முறை
STORY | Clashes erupt in Ladakh amid shutdown to press for advancing talks with Centre
Police fired teargas shells and resorted to baton charge after a group of youths allegedly turned violent and pelted stones amid a massive protest and shutdown in Leh
READ:… pic.twitter.com/yz8xouS7an
— Press Trust of India (@PTI_News) September 24, 2025
போராட்டத்தின்போது பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டம் நீடித்த நிலையில், 2025 அக்டோபர் 6ஆம் தேதி பேச்சுவாரத்தை நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் முழு அடைப்புக்கு அழைத்து விடுத்தனர். மேலும், 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று காலை போராட்டங்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
Also Read : ‘என் மனைவியை கொன்றுவிட்டேன்’ பேஸ்புக் லைவில் அறிவித்த கணவன்.. கேரளாவில் ஷாக்!
இதனால், போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. லேவில் உள்ள பாஜக அலுவலகத்தைத் தாக்கினர். மேலும், தீ வைத்து எரித்துள்ளனர். காவல்துறையினர் மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். காவல்துறை வாகனத்தையும் ஏரித்துள்ளனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசாரும், கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடியும் நடத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. லடாக் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.