Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘என் மனைவியை கொன்றுவிட்டேன்’ பேஸ்புக் லைவில் அறிவித்த கணவன்.. அதிர்ந்த கேரளா!

Kerala Murder : கேரளாவில் மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவில் கணவர் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், ஆத்திரத்தில் மனைவியை கணவர் கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் திமுக நிர்வாகி என தெரியவந்துள்ளது.

‘என் மனைவியை கொன்றுவிட்டேன்’ பேஸ்புக் லைவில் அறிவித்த கணவன்..  அதிர்ந்த கேரளா!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Sep 2025 07:55 AM IST

கேரளா, செப்டம்பர் 23 : கேரள மாநிலத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, பேஸ்புக் லைவில் கணவர் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, மனைவியை கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி(39). இவரது கணவர் ஜசக் மேத்யூ (24). இந்த தம்பதிக்கு 16, 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ஷாலினி தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக ஷாலினி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். தனித்தனியாக வசித்து வந்தாலு, ஜசக் அடிக்கடி ஷாலினி பெற்றோர் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று காலையில் ஜசக் மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஷாலினியை அவர் கத்தியால் குத்தினார். தனது இரு மகன்களின் கண்முன்னே ஷாலினியை, ஜசக் கத்தியால் குத்தினார். இதனால் அவரது கழுத்து, மார்பு மற்றும் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. இதில், ஷாலினி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த ஷாலினியின் குழந்தைகள் அலறி துடித்தனர். ஆனால், இதனை கண்டுகொள்ளாமல் ஜசக் தப்பிச் சென்று, பேஸ்புக் நேரலையில் மனைவியை கொன்றதாக அறிவித்தார்.

Also Read : ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்.. காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 5 பேர் கைது!

மனைவியை கொன்று பேஸ்புக் லைவில் அறிவித்த கணவன்

பேஸ்புக் லைவில் இரண்டு நிமிடம் ஜசக் பேசினார். அதாவது, ஷாலினி தனக்கு ஒருபோதும் தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என்றும்,  அவர் தாயுடன் வாழச் சென்றுவிட்டதாகவும் ஐசக் குற்றம் சாட்டினார். அவர் தனது நகைகளை அடமானம் வைத்து வாகனம் வாங்கியதாகக் குற்றம் சாட்டினார். அவர் வேலை மற்றும் அரசியல் கட்சி கூட்டங்களில் தீவிரமாக பங்கேற்றது குறித்து பலமுறை கண்டித்ததாக அவர் கேட்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் குடிகாரனோ அல்லது புகைப்பிடிப்பவனோ அல்ல. அவள் எங்காவது வேலைக்குச் செல்கிறாள். அவள் வேலைக்குச் செல்லத் தேவையில்லை. நான் செல்கிறேன். ஆனால் அவளுக்கு அவளுடைய கட்சியின் ஆதரவு இருக்கிறது. அடிக்கடி கட்சி கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை” என்றும் பேஸ்புக் லைவில் பேசினார்.

Also Read : பெண்ணுடன் தனிமையில் இருந்த நபர்.. பணம் தர மறுத்ததால் கொலை!

இதனை அடுத்து, ஜசக் காவல் நிலையத்தில் சரணடைந்தால். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். கொலை நடந்த வீட்டை தடயவியல் குழு ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையின்படி, கொலை செய்யப்பட்ட ஷாலின் மார்க்சிஸ் கட்சியின் நிர்வாகியாக இருந்த அவர், சமீபத்தில் திமுகவில் இணைந்தார். திமுக கொல்லம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக ஷாலின் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.