Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trichy: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.. பாலியல் தொல்லையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

Trichy Crime News: திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் மாரீஸ்வரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பாலியல் துன்புறுத்தல் பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இளங்கோவன் எனும் நபர் மற்றும் அவருடைய 5 நண்பர்கள் மீது பாலியல் தொல்லை, மிரட்டல், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trichy: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.. பாலியல் தொல்லையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்!
இளைஞர் தற்கொலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 22 Sep 2025 06:37 AM IST

திருச்சி, செப்டம்பர் 22: திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் பின்னணி தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியில் கர்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகனான 21 வயதுடைய மாரீஸ்வரன் என்பவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். இவர் மண்டையூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இப்படியான நிலையில் மாரீஸ்வரனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் மூலமாக திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி மெசேஜ் வழியாக பேசி வந்துள்ளனர்.

நேரில் வரவழைத்து தொல்லை

இப்படியான நிலையில் மாரீஸ்வரனை அரியமங்கலம் வர சொல்லி நேரில் சந்தித்த இளங்கோவன் அவரிடம் பணம் கடன் வாங்கியதுடன் மட்டுமல்லாமல் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.  இதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டு மாரீஸ்வரனுக்கு அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Also Read: காதல் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. அதிர்ந்த நெல்லை.. நடந்தது என்ன?

மேலும் தான் அழைத்த நேரத்திற்கு வரவில்லை என்றால் இத்தகைய படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து விடுவதாக இளங்கோவன் மிரட்டி வந்துள்ளார். இதனால் செய்வதறியாது மாரீஸ்வரன் தவித்து வந்துள்ளார்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில், 2025 செப்டம்பர் 20ஆம் தேதி அரியமங்கலத்துக்கு மாரீஸ்வரனை மீண்டும் மிரட்டி அழைத்த இளங்கோவன் மற்றும் அவரது 5 நண்பர்கள் ரூ.5 ஆயிரம் பணத்தைப் பறித்துக் கொண்டதுடன் மட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் வாங்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன் தான் தங்கும் விடுதிக்கு வந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றியும், என்ன மாதிரியான தொல்லைகள் என்பதை பற்றியும் நீண்ட கடிதம் எழுதினார். மேலும் தான் அரியமங்கலம் சென்று வந்ததற்கான பயண சீட்டுகளையும், தனது செல்போன் பாஸ்வேர்டையும் எழுதி வைத்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

Also Read: நீ எனக்கு வேணும்.. கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசிய பேராசிரியர்!

இதனை அடுத்து மண்டையூரில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு சென்று அங்கு வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.  இதனை அடுத்து மாறிய மாரீஸ்வரனின் சமூக வலைதளப் பதிவை கொண்டு திருச்சி ரயில்வே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாரீஸ்வரன் தங்கி இருந்த விடுதி அறையில் இருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் இளங்கோவன், பாண்டீஸ்வரன், பவித்ரன், முத்துராஜா, ஆண்டனி சஞ்சய் ஆகிய ஐந்து பேரையும் திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.