காதல் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. அதிர்ந்த நெல்லை.. நடந்தது என்ன?
Tirunelveli Crime News : திருநெல்வேலியில் பெண்ணை, அவரது கணவர் கழுத்தறுத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாய் மற்றும் சகோதரரிடம் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் மனைவியை, கணவர் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மனைவியை கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் இளைஞர் சரணடைந்துள்ளார்.

திருநெல்வேலி, செப்டம்பர் 19 : திருநெல்வேலியில் குடும்பத் தகராறு மனைவியை கழுத்தை நெறித்து கணவன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து நிலையில் குடும்பத்தகராவில் இது போன்ற கொடூர செயலை இளைஞர் செய்திருக்கிறார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜ் (24). இவர் பகுதியில் பெயின்டராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பிருத்திகா (20). இவர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். பிஏ படித்து வரும் பெண் கிருத்திகா கடந்த ஒன்றரை ஆண்டாக அன்புராஜை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் அன்புராஜுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் நெல்லையில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளனர். மனைவி பிருத்திகா தாய் மற்றும் சகோதரருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டு வந்திருந்தார். ஆனால் இது அன்புராஜுக்கு பிடிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு பிருத்திகா தனது தாய் மற்றும் சகோதரனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வேலையை முடித்து வீட்டிற்கு வந்த அன்புராஜ் மனைவி ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்து அவரை கண்டித்துள்ளார் .
Also Read : தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?




இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாதம் நீடித்த நிலையில், மனைவி பிருத்திகாவை துப்பட்டாவால் அவரது கழுதை நிறுத்தி கீழே தள்ளி இருக்கிறார். பின்னர் அங்கிருந்த கத்தியால் பிரித்திகாவில் கழுத்தை அறுத்துள்ளார். இது சம்பவ இடத்திலேயே பிருத்திகா உயிரிழந்துள்ளார். இதன் பின்பு அன்புராஜ் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றவர் அதிகாலையில் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
Also Read : விஜய் பிரச்சாரத்திற்காக சிறப்பு குழு.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தலைமை கழகம்..
அவர் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து நெல்லை போலீசார் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரதி பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தாயுடன் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்ததால் காதல் மனைவியை கணவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.