Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?

Diwali Special Trains : தீபாவளி பண்டிகைக்காக தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?
சிறப்பு ரயில்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Sep 2025 15:09 PM IST

சென்னை, செப்டம்பர் 19 : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே, தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைக்காக தெற்கு ரயில்வே சார்பில் 60 சிறப்பு ரயிலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது இதனால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் முக்கிய போக்குவரத்து களில் ஒன்றாக இருப்பது ரயில்வே. தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விரைவு ரயில்களில் பயணித்து வருகின்றனர் இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக பண்டிகை நாட்கள் தொடர் விடுமுறை நாட்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் எனவே பயணிகளின் சிரமத்தை தவிர்க்கவும் நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு செல்லவும் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையும், அக்டோபர் ஒன்றாம் தேதி ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள் இதனை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து முக்கிய இடங்களுக்கு 60 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read : விழுப்புரத்தில் பதிவான 19 செ.மீ மழை.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

இதற்கான முன்பதிவும் செப்டம்பர் 17ஆம் தேதி நடந்தது. இந்த நிலையில் பயணிகளின் தேவைப்படி, கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது ‌. அதன்படி, 2025 செப்டம்பர் 22, 29, அக்டோபர் 06, 13, 20ஆம் தேதிகளில் திங்கள்கிழமை தோறும் சென்னை சென்ட்ரல் கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் பிற்பகல் 1:20 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்று அடைகிறது.

மறு மார்க்கத்தில், 2025 செப்டம்பர் 23, 30, அக்டோபர் 07,14, 21ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்புரைகள் இயக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 35 மணிக்கு புறப்படும் முறையில் மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்ட்ரல் சென்றடைகிறது. இந்த ரயிலில் இரண்டு ஏசி அடுக்கு பெட்டிகள், ஐந்து ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 11 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

Also Read : நெல்லையில் பரபரப்பு.. இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்ஐ.. திக்திக் வீடியோ!

மேலும் திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் 26, 28, அக்டோபர் 03, 05, 10, 12, 17, 24, 26ஆம் தேதிகளில் செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலி செங்கல்பட்டு இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்த புறப்பட்ட அதே நாளில் மதியம் 1 15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் ரயில் அதே நாளில் திருநெல்வேலிக்கு 11:55 மணிக்கு சென்றடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.