சிறுமியின் கழுத்தில் கத்திரிக்கோல் வைத்து மிரட்டல் – செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு
Hospital Scare Incident: செங்கல்பட்டு அருகே அரசு மருத்துவமனையில் சிறுமியின் கழுத்தில் சிகிச்சைக்காக வைத்திருந்த கத்திரிக்கோலை வைத்து மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு, இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (Maduranthakam) அருகே அரசு மருத்துவமனையில் ஏழு வயது சிறுமியின் கழுத்தில் கத்திரிக்கோல் வைத்து கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மதுபோதையில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் சிறுமியின் கழுத்தில் கத்திரிக்கோல் வைத்தபடி ஆக்ரோஷமாக பேசும் வீடியோ காண்போரை அதிர்ச்சியைடைய செய்துள்ளது. மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே மேலகண்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி. இவர் தனது 7 வயது மகள் யாஷிகாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்திருக்கிறார்.
இதையும் படிக்க : திருமணம் செய்வதாக மோசடி.. குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!




சிகிச்சைக்காக வந்த சிறுமியின் கழுத்தில் கத்திரிக்கோல் வைத்து மிரட்டிய நபர்
அப்போது அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மணிகண்டன் என்பவர் திடீரென்று சிறுமி யாஷிகாவின் கழுத்தில் சிகிச்சைக்காக வைத்திருந்த கத்திரிக்கோலை வைத்து மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஆக்ரோஷமாக கத்தியபடி இருந்ததால் அவர் மன நலம் பாதிக்கப்ப்டட நபரா அல்லது மதுபோதையில் இருந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என்ற கோணத்தில் விசாரணை
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மணிகண்டனை கைது செய்த காவல்துறையினர் அவர் மது போதையில் இருக்கிறாரா அல்லது மன நலம் பாதிக்கப்ப்டட நபரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் சிறுமியை பிடித்து வைத்த பிறகு எந்த கோரிக்கையையும் வைக்காததால் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம்.. நூலிழையில் முதியவரை காப்பாற்றிய போலீஸ்.. குவியம் பாராட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் அடாவடி
செங்கல்பட்டு மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்து, பிரசவம், பல்வேறு சிகிச்சைகளுக்காக இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். தினசரி புறநோயாளிகள் பிரிவில் சுமார் 3,000 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 1,700க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்கள் சிலர் நோயாளிகளின் உறவினர்களிடம் ஊழியர்கள் பணம் கேட்டு அடாவடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.