Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பிய கணவன்.. மனமுடைந்த மனைவி தற்கொலை!

Wife Killer Herself in Tiruppur | திருப்பூரில் கணவன் வேறு இரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கேட்ட மனைவிக்கு அவரது கணவர் தான் வேறு ஒரு பெண்ணுடன் உள்ளாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பிய நிலையில், அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பிய கணவன்.. மனமுடைந்த மனைவி தற்கொலை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Sep 2025 09:43 AM IST

திருப்பூர், செப்டம்பர் 17 : ஈரோட்டில் (Erode) கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உள்ளாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பிய நிலையில், அதனை கண்டு கடும் மன உளைச்சலுக்குன் ஆளான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் நடத்தை மீது சந்தேகமடைந்த அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவரது கணவர் அந்த வீடியோவை அனுப்பியுள்ளார். அதனை கண்டு மனமுடைந்த அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேறு பெண்ணுடன் உள்ளாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பிய கணவன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் கீர்த்தி மீனா. 21 வயது ஆன அவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கீர்த்தி மீனாவுக்கு தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : Perambalur: கணவர் மரணம்.. துக்கம் தாங்காமல் மனைவி, குழந்தையுடன் தற்கொலை

மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட மனைவி

கீர்த்தி மீனா தனது கணவரிடம் சென்று அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், செந்தில் குமார், கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு தான் வேறு ஒரு பெண்ணுடன் உள்ளாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். அதனை கண்ட கீர்த்தி மீனா கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். கணவன் அனுப்பிய வீடியோவை கண்டு மனமுடைந்து போன அவர், சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதையுக் படிங்க : பசை தடவி ஏடிஎம் மிஷினில் கொள்ளை.. ஓசூரில் சிக்கிய வடமாநில கும்பல்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த கீர்த்தி மீனாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், இந்த விவகாரத்தில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கீர்த்தி மீனாவின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.