Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அடியோடு மாறும் மதுராந்தகம்.. 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம்.. தமிழக அரசு மெகா பிளான்!

Chengalpattu Global City : சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூர்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் கூடிய புதிய சர்வதேச நகரம் அமைக்க டிட்கோ டெண்டர் கோரியுள்ளது. 2025-26ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட், செங்கல்பட்டு தேர்வாகி இருந்த நிலையில், அதில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அடியோடு மாறும் மதுராந்தகம்.. 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம்.. தமிழக அரசு மெகா பிளான்!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Sep 2025 17:46 PM IST

சென்னை, செப்டம்பர் 17 :  சென்னைக்கு அருகில் சர்வதேச நகரம் (Chennai Global City) ஒன்றை அமைப்பதற்காக தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இடம் தேர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுத்துள்ளது. எனவே, சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் அமைக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தநைகர் சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மேலும், சென்னை புறநகரான செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. வேலைக்காகவும், படிப்பிற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, சென்னை மட்டுமின்றி புறநகரை பகுதிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்கள் தொகைக்குள் ஏற்ப சாலை வசதிகள், பேருந்து வசதிகள், கல்வி, மருத்துவம் போன்ற வசதிகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-26 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் ஒன்று அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ) ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில், சென்னைக்கு அருகில் சர்வதேச நகரம் ஒன்றை அமைப்பதற்காக தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இடம் தேர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுத்துள்ளது.

Also Read : 3 நாட்களுக்கு அலர்ட்.. கேப் விடாமல் கொட்ட போகுது கனமழை.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் இதோ!

சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம்


சென்னைக்கு அருகில் மிகப்பெரிய சர்வதேச நகரம் அமைக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்கோ டெண்டர் கோரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான திட்டமிடல் குறித்து அறிக்கை தயாரிக்கவும் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம் டெண்டர் கோரி இருக்கிறது.

இந்த புதிய நகரம் அமையும் பட்சத்தில், ஐடி பூங்காக்கள், நிதி தொழில்நுட்ப வர்த்தக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், ஷாப்பிங் வளாகங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் மாநாட்டு அரங்குகள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை இடம்பெற உள்ளது.

Also Read : பட்டப்பகலில் பயங்கரம்… பாமக பிரமுகரை அடித்தே கொன்ற மர்ம கும்பல்.. செங்கல்பட்டில் சம்பவம்

நடுத்தர மக்களும், குறைந்த வருமான கொண்ட மக்களும் தங்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன. நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்களும் ஒரு அங்கமாக இருக்கும். இந்த திட்டம் மூலம் மதுராந்தகம் பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடைய உள்ளது. குறிப்பாக நிலங்கள், வீடுகளின் மதிப்புகள் பல மடங்கு உயரக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.