AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பீச் டூ செங்கல்பட்டு.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எப்போது தெரியுமா?

Chennai EMU Train Cancelled : சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 2025 மே 30ஆம் தேதியான இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பீச் டூ செங்கல்பட்டு.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எப்போது தெரியுமா?
சென்னை மின்சார ரயில்
Umabarkavi K
Umabarkavi K | Published: 30 May 2025 07:34 AM IST

சென்னை, மே 30 : பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையில் மின்சார ரயில்கள் 2025 மே 30, ஜூன் 2ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக, செங்கல்பட்டு – கடற்கரை வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள். இந்த மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். குறிப்பாக, புறநகரை இணைக்கக் கூடிய சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். பொதுமக்களின் அதிக பயன்பாட்டில் இந்த வழித்தடம் உள்ளது. ஒருநாள் ரயில் சேவை இல்லாவிட்டாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த வழித்தடத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

இதனால், குறிப்பிட்ட நாட்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம் தான். அந்த வகையில், மூன்று நாட்களுக்கு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே காட்டாங்குளத்தூர் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும், 2025 மே 30, ஜூன் 2ஆம் தேதி சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடங்களிலி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், மூன்று நாட்கள் இந்த வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

2025 ஜூன் 1ஆம் தேதி காலை 11.45 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 4 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஜூன் 1ஆம் தேதி காலை 11,00, 11.45, மதியம் 12.30, 1.45 மணிக்கு கடற்கரை – செங்கல்பட்டு ரயில் கூடுவாஞ்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 2025 ஜூன் 1ஆம் தேதி மதியம் 12.45 மணிக்கு கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த வழித்தடங்கள்


2025 மே 30, ஜூன் 2ஆம் தேதிகளில் காலை 9.40 மணிக்கு சென்னை கடற்கரையில் – கும்மிடிப்பூண்டிக்கும் இயக்கப்படும் ரயில், இரவு 10.15, மதியம் 12.10, மதியம் 1.05 மணிக்கு மூர் மார்க்கெட் – சூல்லூர்பேட்டை ரயில், காலை 10.30, 11.35 மணிக்கு இயக்கப்படும் மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி ரயில்கள், பகல் 12.40 மணிக்கு கடற்கரை – கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்து முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில், தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் சிரமத்தை வோக்க, அந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Follow Us