AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2025-26 கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா..?

2025-26 Tamil Nadu School Holidays: 2025 ஜூன் 2ம் தேதி தமிழக பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்படும். புதிய கல்வியாண்டில் பக்ரித், மொஹரம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பல விடுமுறைகள் உள்ளன. அனைத்து சனி, ஞாயிறுகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விடுமுறை நாட்களின் பட்டியல் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025-26 கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா..?
தமிழ்நாடு பள்ளி விடுமுறை பட்டியல்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 30 May 2025 11:30 AM IST

தமிழ்நாடு மே 28: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 2025 ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம். 2025 ஜூன் 7ம் தேதி பக்ரித், ஜூலை 6ம் தேதி மொஹரம். ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம் (15), கிருஷ்ண ஜெயந்தி (16), விநாயகர் சதுர்த்தி (27) விடுமுறை. செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி, அக்டோபரில் ஆயுத பூஜை (1), விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி (2), தீபாவளி (20) விடுமுறை வழங்கப்படும். டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமையாகும். அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் முழுமையாக விடுமையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறைகள் மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கும் தேதி உறுதி

தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை ஆண்டு தேர்வுகள் முடிந்ததைத் தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெயில் அட்டகாசமாக இருந்ததால் பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திட்டமிட்டபடி 2025 ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முதலில் ஏற்பட்ட கடும் வெப்பத்தால் பள்ளி திறப்பில் மாற்றம் ஏற்படுமா என பெற்றோர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது பருவ மழை தொடங்கியதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, முன்னதாக அறிவிக்கப்பட்டவாறே பள்ளிகள் 2025 ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் விடுமுறைகள் எவ்வளவு?

பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு எத்தனை விடுமுறை நாட்கள் கிடைக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவலின்படி முக்கியமான விடுமுறை நாட்கள் விவரம் பின்வருமாறு:

ஜூன் மற்றும் ஜூலை மாத விடுமுறை

தமிழக பள்ளிகளில் 2025 ஜூன் 7ம் தேதி (சனிக்கிழமை) பக்ரித் பண்டிகை மற்றும் 2025 ஜூலை 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாத விடுமுறை நாட்கள்

ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு மூன்று முக்கிய விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. 2025 ஆகஸ்ட் 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம், 16ம் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி மற்றும் 27ம் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விடுமுறைகள்

2025 செப்டம்பர் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) மிலாடி நபி, 2025 அக்டோபர் 1ம் தேதி (புதன்கிழமை) ஆயுத பூஜை, 2025 அக்டோபர் 2ம் தேதி (வியாழக்கிழமை) விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20ம் தேதி (திங்கள்) தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையாகும். 2025 டிசம்பர் 25ம் தேதி (வியாழக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவும் விடுமுறை அளிக்கப்படும்.

சனி, ஞாயிறு முழுமையான விடுமுறைகள்

மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று, அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் முழுமையாக விடுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியல்கள் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Follow Us