அடுத்த 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை மையம் அலர்ட்
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும். நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2025 மே 28ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, மே 28 : தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய (tamilnadu weather update) வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் கூட, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், 2025ஆம் ஆண்டில் முன்கூட்டியே 2025 மே 24ஆம் தேதியே தொடங்கிவிட்டது. இதனை அடுத்து, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் தொடங்கிய பருவமழை, தமிழகத்திலும் பரவி உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இதனால், கேரளா மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். ஒடிசா கடலோராப்குதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக் கூடும்.




தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 மே 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 2025 மே 28ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். மேலும், நெல்லை, திருப்பூர், திண்ணடுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கொட்டப்போகும் கனமழை
DAILY WEATHER REPORT- UPDATED IN HEAVY RAINFALL WARNING pic.twitter.com/kxfLcpStVl
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 27, 2025
2025 மே 29, 30ஆம் தேதிகளில் கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 2025 மே 28ஆஆம் தேதியான இன்று நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.