நீலகிரிக்கு பெற்றோருடன் வந்த கேரள சிறுவன்! மரம் முறிந்து உயிரிழப்பு.. சுற்றுலா தலங்கள் மூடல்!
Nilgiris Heavy Rains: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், உதகை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. மழையின்போது மரம் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீலகிரி, மே 25: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கோயம்புத்தூர் (Coimbatore), நீலகிரி, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த இடங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழைக்கு மத்தியில் கேரளாவை அடுத்த கள்ளிக்கோட்டையில் இருந்து நீலகிரிக்கு (Nilgiris) பெற்றோருடன் சுற்றுலாவிற்காக 15 வயது சிறுவன் ஆதிதேவ் வந்துள்ளார். இவர்கள் அனைவரும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஃபைன் பாரஸ்ட் பகுதியில் ஆதிதேவ் தனது பெற்றோருடன் சுற்றிபார்த்து கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் 7ம் மைல் பகுதியில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இந்த பலத்த காற்றினால், அங்கிருந்த திடீரென மரம் முறிந்து ஆதிதேவ் மீது விழுந்தது. இதனால், சிறுவன் ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் ஆதிதேவ் சிறுவனின் உடலை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகையில் சுற்றுலா தலங்கள் மூடல்:
சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, உதகையை சுற்றியுள்ள ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தஙக்ளும் தொடர் மழை காரணமாக நாளை அதாவது 2025 மே 26ம் தேதி தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரிக்கு 2025 மே 25ம் தேதியான இன்றும், 2025 மே 26ம் தேதியான நாளையும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரெட் அலர்ட்:
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு#TNMonsoonPreparedness2025#nilgiris #ooty #disasterpreparedness pic.twitter.com/hBjaTtnshf
— Collector & DM, The Nilgiris (@collrnlg) May 25, 2025
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மலைத்தொடர் பகுதிகளை உள்ளடக்கிய மேற்கி தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் 2025 மே 25 மற்றும் மே 26ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகுவதற்கான சாதகமான சூழ்நிலை இருப்பதால் கனமழை பெய்து வருகிறது.
வானிலை நிலைமை காரணமாக 2025 மே 23 முதல் 27 வரை நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2025 மே 27ம் தேதியில் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், கோவை மாவட்டங்களின் நீலகிரி மற்றும் மழைத்தொடர் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.