Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தந்தையுடன் தொடர்பில் இருந்த பெண்ணை வெட்டிக் கொன்ற 16 வயது சிறுவன்!

Thoothukudi Crime News: தூத்துக்குடி அருகே, காவல் அதிகாரியுடன் உறவு வைத்திருந்த பெண்ணை அவரது 16 வயது மகன், நண்பனுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளான். காவல் அதிகாரியின் மனைவியுடனான பிரிவுக்குக் காரணம் அந்தப் பெண் எனக் கருதியதாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

தந்தையுடன் தொடர்பில் இருந்த பெண்ணை வெட்டிக் கொன்ற 16 வயது சிறுவன்!
சக்தி மகேஸ்வரி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 16 Sep 2025 07:11 AM IST

தூத்துக்குடி, செப்டம்பர் 16: தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை திருமணத்தை மீறிய தொடர்பு வைத்திருந்த நிலையில், அவருடன் உறவில் இருந்த பெண்ணை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி பகுதியில்  திரேஸ் நகர் என்ற ஏரியா உள்ளது. இப்பகுதியைச்  சேர்ந்த ராமசுப்பு என்பவர் கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்த பணியில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு சக்தி மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இப்படியான நிலையில் தம்பதிகள் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சக்தி மகேஸ்வரி ராமசுப்பைவை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

திருமணத்தை மீறிய தொடர்பு

அப்போது அவரது உறவுக்கார நபரான தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு அதிகாரி ஒருவருடன் சக்தி மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய தொடர்பாக மாறியுள்ளது. அந்த காவல் அதிகாரிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகள் மற்றும் 16 வயது மகன் ஆகியோர் உள்ளனர். ஆனாலும் சக்தி மகேஸ்வரியும் காவல் அதிகாரியும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.  தனது கணவரின் உறவைப் பற்றி அறிந்ததும் காவல் அதிகாரியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.

Also Read: Crime: அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!

ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் சக்தி மகேஸ்வரியின் வீட்டுக்கு அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த மனைவி தனது கணவனை பிரிந்து சென்றுள்ளார். ஆனால் காவல் அதிகாரியின் மகன் மற்றும் மகள் ஆகியோர் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.  இதற்கிடையில் தனது மகன் மற்றும் மகளை சரிவர கவனிக்காமல் அடிக்கடி சக்தி மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தனது அப்பா, அம்மா பிரிந்து சென்றதற்கு காரணம் சக்தி மகேஸ்வரி தான் என காவல் அதிகாரியின் மகன் கருதியுள்ளான்.

நண்பனுடன் சேர்ந்து கொலை

இதனால் சக்தி மகேஸ்வரியை கொலை செய்ய முடிவு செய்துள்ளான். அதன்படி நேற்று (செப்டம்பர் 15) மாலையில் காவல் அதிகாரியின் மகன் தனது நண்பனான 16 வயது சிறுவன் ஒருவனுடன் சக்தி மகேஸ்வரன் வீட்டுக்கு சென்றான். அங்கு தனியாக இருந்த சக்தி மகேஸ்வரியிடம் தனது தந்தையுடனான உறவை கைவிடும்படி கூறி வாக்குவாதம் செய்துள்ளான்.  தொடர்ந்து கோபத்தில் இருந்த அந்த சிறுவன் நண்பனுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

Also Read: மகள் திருமணத்தன்று தாய்க்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் மூழ்கிய கிராமம்

இதில் படுகாயம் அடைந்த சக்தி மகேஸ்வரி அலறி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை உறுதி செய்த சிறுவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரும் முன் அங்கிருந்து தப்பினர். அவர்கள் வந்து பார்த்தபோது சக்தி மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.  இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் சக்தி மகேஸ்வரயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இரண்டு சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.  தந்தையுடன் திருமணத்தை மீது தொடர்பில் இருந்த பெண்ணை தனது நண்பனுடன் சேர்ந்து மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.