Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விபத்தில் சிக்கிய நீதிபதி சென்ற கார்.. 4 பேர் உயிரிழந்த சோகம்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!

Thoothukudi Accident : தூத்துக்குடியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி சென்ற கார் மீது லாரி மோதி இருக்கிறது. இதில், நீதிபதியின் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய நீதிபதி சென்ற கார்.. 4 பேர் உயிரிழந்த சோகம்..  தூத்துக்குடியில் அதிர்ச்சி!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Jun 2025 12:17 PM

தூத்துக்குடி, ஜூன் 13 : தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிபதி (Thanjavur Judge Poorana Jaya Anand) சென்ற கார் விபத்தில் சிக்கியது (Thoothukudi Accident) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, விளாத்திகுளம் அருகே தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீதிபதியின் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நீதிதிப உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீதிபதி பூரணஜெய ஆனந்த். இவர் திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றிருக்கிறார். இவருடன் வழக்கறிஞர், காவலர் என 6 பேரும் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் 6 பேரும் சாமி தரிசனம் செய்துவிட்டு தஞ்சாவூருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

விபத்தில் சிக்கிய நீதிபதி சென்ற கார்

அப்போது, அவர்களது கார் தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலை எட்டயபுரம் அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக ஜிப்சம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக கார் மீது லாரி மோதி இருக்கிறார். இதில் கார் சாலையோரத்தில் கவிழுந்ததாக தெரிகிறது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, படுகாயங்களுடன் இருந்த 6  பேரை மீட்டு அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 பேர் உயிரிழந்த சோகம்

இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி, கார் ஓட்டுநர் வாசுராமநாதன், நீதிபதியின் பாதுகாவலர் உள்ளிட்டோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உள்ளிட்ட 2 பேர் அருப்புக் கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருவதாக தெரிகிறது. இந்த விபத்தால் தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அதன்பிறகு, போக்குவரத்து சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தஞ்சையில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, செங்கிப்பட்டியில் டெம்போவும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒற்றைப் பாதையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்தும், டெம்போவும் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. அதற்கு முன்பு, மதுரையில் சாலையை கடக்க முயன்றபோது, அவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.