AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை மெட்ரோ பணி விபத்து: தூண் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

Chennai Metro Accident: சென்னை மணப்பாக்கத்தில் மெட்ரோ இரண்டாம் கட்டப் பணியின்போது இரும்புத் தூண்கள் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து இருசக்கர வாகனங்களும் சிக்கின. A-frame அமைப்பு வழுக்கியதே காரணம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 5 மணி நேரம் போராடி உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ பணி விபத்து: தூண் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல் மீட்பு Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 13 Jun 2025 10:31 AM IST

சென்னை ஜூன் 13: சென்னை மணப்பாக்கம் (Chennai, Manappakkam) பகுதியில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணியின்போது (Metro Work) இரும்புத் தூண்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், (One dead in Metro Accident) சில இருசக்கர வாகனங்கள் சிக்கியுள்ளன. மேம்பாலத் தூண்களை தாங்கிய A-frame அமைப்பு வழுக்கி விழுந்ததே காரணம் என மெட்ரோ நிர்வாகம் (Metro Administration) தெரிவித்துள்ளது. 5 மணி நேர முயற்சிக்கு பின் சிக்கிய நபரின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கு காரணமானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடிந்து விழுந்த இரும்புத் தூண்கள்

சென்னை மணப்பாக்கம் அருகே உள்ள DLF பகுதியில் இரவு நேரத்தில் நடைபெற்ற மெட்ரோ இரண்டாம் கட்ட பாதை பணிகளின்போது இரும்புத் தூண்கள் மற்றும் கட்டுமானம் தாங்கும் A-frame அமைப்பு திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து இருசக்கர வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், மேலும் ஒருவர் இடிபாடுகளுக்கிடையே சிக்கித் தவித்துவருவதாகவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல் மீட்பு

இச்சம்பவம் எல் & டி நிறுவனத்தின் தலைமை வாயிலில் அமைக்கப்பட்டிருந்த “I” வடிவ இரும்புத்தூண்கள் வழுக்கி விழுந்ததன் காரணமாக நிகழ்ந்ததாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. உடனடியாக மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த நபரின் உடல் மீட்கப்பட்டது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் 118.9 கி.மீ. தூரத்தில் மூன்று வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள 26.1 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சமீபமாக மூன்றாம் கட்ட சோதனை ஓட்டமும் பூந்தமல்லி – போரூர் இடையே நடைபெற்றது.

ஒருவரின் உயிரிழப்புக்கு மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

மனப்பாக்கத்தில் அமைந்துள்ள எல் & டி நிறுவனத்தின் தலைமையகத்தின் பிரதான வாயிலில், ஒரு வாரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட இரண்டு “I” வடிவ இரும்புத் தூண்கள் 2025 ஜூன் 12 அன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தன. இந்த தூண்களை தாங்கி இருந்த A-frame கட்டமைப்பு வழுக்கி கீழே விழுந்ததினால் இவ்விபத்து நிகழ்ந்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் ஏற்பட்டதும், சென்னை மெட்ரோ ரெயில் (CMRL) மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனத்தினர் அவசரமாக இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததைக் கடும் வருத்தத்துடன் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்

மெட்ரோ கான்கிரீட் விழுந்து விபத்தில் பலியான காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் கட்டுமானம் பணிகளை மேற்கொள்ளும் எல்&டி நிறுவனமும் உரிய இழப்பீடுகளை வழங்கும் என கூறியுள்ளார்.

பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் போக்குவரத்து நெரிசல்

இந்த துயரான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள், இரவில் நடைபெறும் வேலைகளின் போது போக்குவரத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து மெட்ரோ நிர்வாகம் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us