AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முட்புதரில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

Abandoned Baby Found Near Tiruvallur Hospital | திருவள்ளூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள முட்புதரில், பிறந்து ஒருசில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முட்புதரில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jun 2025 08:32 AM IST

திருவள்ளூர், ஜூன் 12 : திருவள்ளூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை அருகே பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை முட்புதரில் வீசப்பட்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு அருகே உள்ள முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்ட நிலையில், அப்பகுதியில் வசிக்கும் இளங்கோ என்பவர் முட்புதருக்கு அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தை கிடந்ததை கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், முட்புதரில் இருந்து உடனடியாக குழந்தை மீட்கப்பட்ட நிலையில், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு அருகில் உள்ள முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

தந்தி செய்தியின் தகவலின் படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆறுமுகசாமி கோவில் அருகே அரசுக்கு சொந்தமான தலைமை மருத்துவமனை ஒன்று ஏங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 11, 2025) மாலை 5 மணிக்கு, அரசு மருத்துவமனை அருகே உள்ள முட்புதரில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்துள்ளனர். இதனை அடுத்து, அதே பகுதியில் வசிக்கும் இளங்கோ என்று 50 வயது நபர், சத்தம் கேட்டுக் கொண்டிருந்த முட்புதருக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பிறந்த சில மணி நேரங்களை ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டிருப்பதை கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பச்சிளம் பெண் குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

முட்புதரில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்ட இளங்கோ, அதனை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்த நிலையில், குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பச்சிளம் குழந்தை முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து விசாரணை செய்ய, மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதனை செய்து வருகின்றனர்.

Follow Us