AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முட்புதரில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த கொடூரம்.. சென்னையில் அதிர்ச்சி!

Chennai Infant Murdered By Mother : சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த பெண், இவ்வாறு செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

முட்புதரில்  சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த கொடூரம்.. சென்னையில் அதிர்ச்சி!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 11 Jun 2025 08:59 AM IST

சென்னை, ஜூன் 11 : சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் கொலை செய்ததது (chennai infant murder) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை நீலாங்கரையில் முட்புதரில் ஒரு பையில் இருந்து இரண்டு மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சில அதிர்ச்சியூட்டு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (34). இவர் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

முட்புதரில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை

இரண்டு பெண்கள் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், சம்பவத்தன்று பாரதி தனது இரு குழந்தைகளை அறையில் உறங்க வைத்திருந்தார். அதன்பிறகு, திடீரென ஒரு குழந்தைகள் காணவில்லை என கூச்சலிட்டிருக்கிறார். இதனை அறிந்த, அவரது கணவர் மற்றும் மாமியார் என்னவென்று கேட்டிருக்கின்றனர்.

அப்போது, சமையலறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது ஒரு குழந்தை காணவில்லை என பாரதி கூறியிருக்கிறார். இதனால் பதறிய அவர்கள் உடனே நீலாங்கரை காவல் நிலையத்தில் குழந்தை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை பாரதி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இரட்டை குழந்தை பிறந்ததால் , இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்ள முடியாததால் பாரதி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தாய் செய்த கொடூரம்

மேலும், ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் கவனிக்க முடியாத நிலையும் இருந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே பாரதி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து, யாரும் இல்லாத நேரத்தில், பிறந்து 43 நாட்களே ஆன பெண் குழந்தையை பையில் முட்புதரில் போட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், தாய் பாரதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வயது சிறுமியை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow Us