AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவண்ணாமலை ஆன்மீகத் திருத்தலத்தில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி.!

Couple Eats Biryani Inside Temple: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ரமேஷ் மற்றும் அவரது மனைவி பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முட்டை மற்றும் இறைச்சியுடன் கூடிய உணவை கோவிலில் சாப்பிட்டதைக் கண்ட பக்தர்கள் தகவல் அளித்தனர். காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, உணவு எவ்வாறு கோவிலுக்குள் வந்தது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை ஆன்மீகத் திருத்தலத்தில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி.!
திருவண்ணாமலை ஆன்மீகத் திருத்தலத்தில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 10 Jun 2025 07:10 AM IST

திருவண்ணாமலை ஜூன் 10: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் (Arunachaleswarar Temple, Tiruvannamalai) ஐந்தாம் பிரகாரத்தில், ரமேஷ் என்பவர் அவரது மனைவியுடன் பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முட்டை மற்றும் இறைச்சியுடன் கூடிய உணவை கோவிலில் சாப்பிட்டதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்து தகவலளித்தனர். பெண் காவலர்கள் (Woman Police) இருவரையும் கைது செய்து விசாரணைக்காக போலீஸில் ஒப்படைத்தனர். கோவிலின் நுழைவாயில்களில் சோதனை நடக்கின்ற போதும், இவ்வாறு உணவு கொண்டு செல்லப்பட்டது எப்படி என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பக்தர்களிடையே இது ஆன்மீக கோவிலின் புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

கோவில் வளாகத்தில் பிரியாணி சாப்பிட்ட கணவன் மனைவி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆன்மீகத்தின் திருத்தலமான ஐந்தாம் பிரகாரத்தில், ஒரு கணவன் மனைவி அமர்ந்து முட்டை மற்றும் இறைச்சியுடன் கூடிய பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த அக்னி ஸ்தலத்தில், பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் தரிசனம் செய்யும் நிலையில், கோவிலின் தூய்மை மற்றும் புனிதத்திற்கே சவாலாக அமையக்கூடிய இந்தச் சம்பவம் பக்தர்கள் மனதில் கடும் எதிர்வினையை உருவாக்கியுள்ளது.

கோவில் வளாகத்தில் பிரியாணி

பக்தர்கள் அதிர்ச்சி: கோவில் ஊழியர்களிடம் தகவல்

இருவரும் திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நேராக அமர்ந்து உணவுகளை பிரித்து சாப்பிடுவதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கோவில் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, விசாரணைக்காக திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பைகளை சோதனை செய்த பின்பே பக்தர்கள் அனுமதி

இந்நிலையில், கோவில் நுழைவாயில்களில் போலீசார் தொடர்ந்து பைகளை சோதனை செய்த பின்பே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக இருந்தும், இவ்வாறு அசைவ உணவு கோவிலுக்குள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது கோவில் பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகள் உள்ளதா? எனும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

புனிதத்திற்கே இழிவாக உள்ள சம்பவம் ஆன்மீக மக்களிடையே கடும் அதிருப்தி

அண்மைக்காலமாக, திருவண்ணாமலையார் கோவிலுக்கு தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தரும் நிலையில், புனிதத்திற்கே இழிவாக உள்ள சம்பவம் ஆன்மீக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தற்போது சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்தர்களிடையே இது ஆன்மீக கோவிலின் புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

Follow Us