AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதியோர் இல்லத்தில் சோகம்.. கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பேர் பலி.. தென்காசியில் நடந்த சம்பவம்!

Tenkasi Crime News : தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 8 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதியோர் இல்லத்தில் சோகம்.. கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பேர் பலி.. தென்காசியில் நடந்த சம்பவம்!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Jun 2025 17:23 PM IST

தென்காசி, ஜூன் 12 : தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட  3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 8 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில்  பல்வேறு மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள்  செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் சரியாக பராமரிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன.  குறிப்பாக, உணவு சரியாகவும் ஆரோக்கியமாகவும் வழங்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த சூழலில் தென்காசியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, தென்காசியில் மாவட்டத்தில் முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பேர் பலி

அதாவது, தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் 20க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இந்தநிலையில், 2025 ஜூன் 11ஆம் தேதியான நேற்று இரவு வழங்கிய உணவை சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல் நல பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.

பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 8 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட முதியோர் இல்லம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மதுரையில் நடந்த சம்பவம்

முன்னதாக, 2025 ஜூன் 11ஆம் தேதி மதுரை மாவட்டம் கல்லுமடை கிராமத்தில் கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 107பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோயில் கும்பாபிஷேக விழாவில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், அங்கு சாப்பிட்ட 107 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் முக்கியம். இதனால், வெளியே தேவையின்று உணவுகளை சாப்படுவதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை அனைவரும் உறுதி செய்து கொள்ளுங்கள்.  வீட்டு உணவுகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us