ரத்தம் தெறிக்க ஒரு காதலர் தின வாழ்த்து… வெளியானது டிசி படத்தின் கிளிம்ஸ் வீடியோ
Bloody Valentine Glimpse Video | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் டிசி. இந்தப் படத்தில் இருந்து காதலர் தினத்தை முன்னிட்டு கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அறிமுகம் ஆன படம் மக்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய், கமல் ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் கார்த்தி என பலரை இயக்கி உள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இறுதியாக இயக்கிய படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் மூலமாக லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடன் இணைந்து நடிகைகள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
வெளியானது டிசி படத்தின் கிளிம்ஸ் வீடியோ:
இந்த நிலையில் இன்று பிப்ரவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு டிசி படக்குழுவினர் ஒரு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் லோகேஷ் கனகராஜ் பலரை கொடுரூமாக கொலை செய்வது எல்லாம் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டிசி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Love hits harder this Valentine’s Day! ❤️🔥 Team #DC wishes you all a Happy Valentine’s Day! ♥️ @Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah pic.twitter.com/cQajx8GXRU
— Sun Pictures (@sunpictures) February 14, 2026
Also Read… இதுதான் வெற்றியா என்று அப்பாவிடம் கேட்டேன்… நெகிழ்ந்து பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்



