Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூலி படத்திற்கு ஏ சென்சார் சான்றிதழ் ஏன்… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

Director Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தது பற்றியும் அதனை ஏன் மறுக்கவில்லை என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கூலி படத்திற்கு ஏ சென்சார் சான்றிதழ் ஏன்… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jan 2026 18:23 PM IST

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்போது அதிகமாக பேசப்படும் ஒரு விசயம் சென்சார். அதற்கு காரணம் நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்திற்கு சென்சார் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகின்றது. மேலும் ஜன நாயகன் நடிகர் விஜயின் இறுதிப் படம் என்பதால் இந்தப் படத்திற்கும் தளபதி விஜய்க்கும் ஆதரவாக பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதவரை நடிகர் விஜய்க்கு தொடர்ந்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனைக்கு பிற்கு தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய திரையுலகில் உள்ளவர்களும் தங்களுக்கான சென்சார் பிரச்சனைகள் குறித்து பேசுகின்றனர். அப்படி இல்லை என்றால் சினிமா சார்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சென்சார் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் சென்சார் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்திற்கு முன்னதாக தணிக்கைச் சான்றிதழ் முழு ஏ சான்றிதலை வழங்கியது. அதுகுறித்து லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கூலி படத்திற்கு ஏ சென்சார் சான்றிதழ் ஏன்?

‘கூலி’ படத்திற்கு சிபிஎஃப்சி 35 வெட்டுக்களைப் பரிந்துரைத்தனர். மேலும் 9 இடங்களில் மியூட் செய்யப்படும் என்று தெரிவித்தனர். மியூட் செய்வது கூட பரவா இல்லை. ஆனால் 35 கட் என்பது படத்தையே பாதித்துவிடும். படம் முழுவதுமாக வெளியாகியே புரியவில்லை என்று கூறினர். அது என் தவறுதான் நான் சரியாக விளக்கம் கொடுத்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் நான் ‘ஏ’ சான்றிதழைத் தேர்ந்தெடுத்தேன் என்றால் நாங்கள் மறு தணிக்கைக்கு விண்ணப்பித்த போதும், அவர்கள் மீண்டும் அதே 35 வெட்டுக்களையே பரிந்துரைத்தனர். மேலும் படத்தில் பிணங்களை எரிப்பது எல்லாம் காட்டுவதால் அப்படிதான் இருக்கும் என்றனர். நான் ஏ சான்றிதழைத் தேர்ந்தெடுத்தபோது தயாரிப்பாளர் மற்றும் ரஜினி சாரிடம் கூறி ஒப்புதல் வாங்கினேன் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read… புதிய உச்சத்தை தொட்டது கோல்டன் ஸ்பாரோ பாடல்… நீக் படக்குழு வெளியிட்ட பதிவு

இணையத்தில் கவனம் பெறும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்… வெளியானது புது தகவல்