Arasan Movie: அரசன் திரைப்படத்தில் இரு நாயகிகளா? அட இந்த நடிகையும் இருக்காங்களா?
Silambarasans Arasan Movie Update : சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிவரும் படம்தான் அரசன். இந்த படமானது மிகவும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகைகள் யார் என பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்நது மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் வெற்றிமாறனுடன் (Vetrimaaran) சிலம்பரசன் இணைந்து நடித்துவரும் படம்தான் அரசன் (Arasan). இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு (Kalaippuli S Thanu) தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்து வருகிறார். இவர் முதன்முறையாக சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து படத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் கோவில்பட்டி பகுதியில் தொடங்கிய நிலையில், அதை தொடர்ந்து 2026 ஜனவரி தொடக்கத்தில் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்தது.
இந்நிலையில் இப்படத்தை அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் இரு நடிகைகள் நடிப்பதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அது எந்த நடிகைகள் என பார்க்கலாம்.




இதையும் படிங்க: ரீ ரிலீஸாகும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த லவ் ஸ்டோரி… எப்போது தெரியுமா?
சிலம்பரசனின் அரசன் படத்தில் இணையும் இரு கதாநாயகிகள்:
இந்த அரசன் படத்தில் ஏற்கனவே டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்து பிரபலமான இளம் நடிகை யோகாலெட்சுமி நடித்துவருகிறார். இதில் சிலம்பரசனின் தங்கை வேடத்தில் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த அரசன் படமானது வட சென்னை படத்தின் ஒரு பகுதியாக தயாராகிவரும்நிலையில், இதில் வட சென்னை படத்தில் நடித்த சில முக்கியமான கதாபாத்திரங்களும் இதில் நடிக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இறுதித் தீர்ப்பு எப்போது இருக்கும்?
அதில் ஆரம்பத்திலிருந்து இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், இன்னும் அது உறுதியாகவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு நடிகை நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் சிலம்பரசன் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கு நிலையில், அவருக்கு ஜோடியாகவும் பிரபல நடிகை ஒருவர் நடிப்பார் என கூறப்படுகிறது. அது குறித்து இன்னும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
அரசன் திரைப்படம் குறித்து சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Presenting the promo of #Arasan to you all 🙂#ARASANPromo – https://t.co/Jh7WCRRa4n#VetriMaaran @anirudhofficial @theVcreations #VCreations47 @prosathish @RIAZtheboss
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2025
இந்த அரசன் படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 மே மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்தாக 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.