AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்சி: புதிய கார் வாங்கியவருக்கு நேர்ந்த சோகம்… ஒருவர் பலி..! நடந்தது என்ன?

New Car Crashes: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு அருகில், புதிய சொகுசு காரின் விபத்தில் 40 வயது பக்தர் உயிரிழந்தார். கோயிலில் பூஜை செய்துவிட்டு திரும்பிய கார் ஓட்டுநர், காரை திருப்பும்போது தவறுதலாக பக்தர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே பக்தர் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார்.

திருச்சி: புதிய கார் வாங்கியவருக்கு நேர்ந்த சோகம்… ஒருவர் பலி..! நடந்தது என்ன?
திருச்சி கார் விபத்து Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 13 Jun 2025 07:38 AM IST

திருச்சி ஜூன் 13: திருச்சி (Tiruchirappalli) சமயபுரம் மாரியம்மன் கோயில் (Samayapuram Mariamman Temple) அருகே 40 வயது பக்தர் ஒருவர் சாலையோரம் படுத்திருந்தபோது, புதிய சொகுசு கார் (luxury car accident) அவர் தலையில் ஏறி இறங்கியது. இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என அடையாளம் காணப்பட்டார். அவர் கோயிலில் காருக்கு பூஜை செய்து திரும்பும் போது தவறுதலாக விபத்து ஏற்பட்டது. சமயபுரம் போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். கார் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி சமயபுரத்தில் பக்தரின் உயிரை வாங்கிய விபத்து

டைம்ஸ் ஆப் இந்தியா செய்திதாளில் வெளியான தகவலின் படி, திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தெற்கு வாசல் அருகே நடந்த சோகமான சம்பவத்தில், ஒரு பக்தர் உயிரிழந்தார். கோயிலுக்கு வந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் பக்தர் ஒருவர், சாமி தரிசனம் முடித்து தேரோடும் வீதியில் சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில், சமயபுரத்திற்கு புதிய சொகுசு கார் ஒன்றில் வந்துள்ள நபர்கள், காருக்கு பூஜை செய்து விட்டு திரும்பச் செல்லும்போது, காரை திருப்ப முயன்ற ஓட்டுநர், தவறுதலாக அந்த பக்தரின் தலையில் கார் ஏறி இறங்கியது.

புதிய சொகுசு கார் ஏறி இறங்கியதில் உயிரிழப்பு

இதனால் அவர் அதே இடத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சமயபுரம் போலீசார், உடலை மீட்டு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். கார் ஓட்டுநர் கரூர் மாவட்டம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பதும், திருச்சியில் புதிய கார் வாங்கி கோயிலில் பூஜை செய்து விட்டு வீட்டிற்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை

அண்மையில் வாங்கிய புதிய காருக்கு பூஜை போட சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த ஒருவர் காருக்கு பூஜை போட்டுக்கொண்டிருந்தார். அப்போது காரை பின்புறம் திருப்பிய போது எதிர்பாராத விதமாக கோயில் தேருக்கு அருகே படுத்திருந்த ஒரு பக்தர் மீது மோதியது.

இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பிறகு விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரின் உரிமையாளர் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us