நீ எனக்கு வேணும்.. கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசிய பேராசிரியர்!
Trichy Crime News: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் குருவாக மதிக்கப்பட்டு வரும் பேராசிரியரே மாணவியிடம் இப்படி பேசலாமா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த மாதிரியான நபர்களை அடையாளம் கண்டு வெளிகொண்டு வர வேண்டும். அப்போது தான் ஆசிரியர் சமூகம் கறை படியாமல் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

திருச்சி, செப்டம்பர் 12: திருச்சி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மாணவி ஒருவரிடம் காதல் வலை வீசுவதும், பாலியல் ஆசைக்கு அழைப்பதும் அடங்கிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெய்வத்திற்கு மேலாக பார்க்கப்படுபவர்கள் குருவான ஆசிரியர்கள். அவர்கள் நம் வாழ்க்கையை ஒருபடி மேலே உயர்த்துவதில் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள். ஆனால் சில ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் சம்பவமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் செய்யும் தவறினால் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மீது களங்கள் ஏற்படுகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு சம்பவம் தான் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
வைரலாக பரவி வரும் ஆடியோ
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியராக நாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி ஒருவரிடம் பேசிய போன் கால் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் பேசும் நாகராஜ் அந்த மாணவியிடம், “என்னமோ தெரியல.. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்! நீ எனக்கு முக்கியம்.. என் கூட இருப்பியா? மாட்டியா?. இருப்பேன்னு சொன்னின்னா முதல் நாள் ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு வந்தேல்ல ஞாபகம் இருக்கா?. அந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு தலை நிறைய பூ வச்சிட்டு வா அது போதும்” என அந்த ஆடியோவில் தெரிவிக்கிறார்.
Also Read: சேலத்தை அதிர வைத்த பெண்.. திண்டுக்கல் வியாபாரிடம் ரூ.10 கோடி மோசடி!
நாகராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த ஆடியோவில் பேசும் மாணவி உங்களுக்கும் மனைவிக்கும் என்ன பிரச்சனை என கேட்டார். தன்னுடைய தங்கையால் வந்தது என நாகராஜ் விளக்கம் அளிக்கிறார். மேலும், வகுப்பில் அத்தனை பெண்கள் இருக்க ஏன் என்னிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என அந்த மாணவி மீண்டும் கேள்வி எழுப்ப, “அது என்னவோ தெரியவில்லை” என நாகராஜ் சொல்கிறார். ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. என்னவென்று சொல்லுங்கள் என அந்த மாணவி கறாராக திருமப திரும்ப கேட்கிறார்.
உடனே நாகராஜ், ‘எல்லா உரிமையும் என் மீது உனக்கு இருக்கிறது என நினைத்துக் கொண்டு என்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன். ஆனால் நீ லிமிட்டாக இருக்க வேண்டும் என நினைக்கிறாய்’ என சொல்ல அந்த மாணவி, ‘உங்களுக்கு என்ன தான் சார் வேணும் என கேட்கிறார். கேட்டால் கொடுப்பாயா? என நாகராஜ் கேட்க, என்னால் முடிந்தால் தருகிறேன், என அந்த மாணவி பதிலளிக்கிறார்.
உடனே நாகராஜ் சற்றும் தாமதிக்காமல், “நீ வேண்டும்” என கூறுகிறார். நான் உங்களுடன் தான் இருக்கிறேன் என அந்த மாணவி வெகுளியாக கூற ‘நான் இருக்கிறேன்.. நீங்க பயப்படாதீங்க.. நான் உங்ககூட இருப்பேன்’ என சொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறார். என்னுடன் நீ இருப்பியா? இருக்க மாட்டியா?. அதை மட்டும் சொல் என சொல்லிவிட்டு, உன்னிடம் இருந்து எனக்கு எல்லா விஷயமும் கிடைக்குமா? கிடைக்காதா? என பதில் சொல் என்று நாகராஜ் கேள்வி எழுப்புகிறார்.
Also Read: மதிக்காத மனைவி,மகன்.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!
எனக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என புரியவில்லை என்றுன் அந்த மாணவி கேட்க, அனுமதி இல்லாமல் உன்னை கட்டிப்பிடிக்க கூடாது, முத்தம் கொடுக்கக் கூடாது என சொன்னால், நான் எதற்கு உனக்கு? என நாகராஜ் கொஞ்சம் கூட யோசிக்காமல் பதிலளிக்கிறார்.
சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனைத் தொடர்ந்து சக மாணவிகள் ஆலோசனையின் பெயரில் நாகராஜுடனான போன்காலை ரெக்கார்டு செய்து கல்லூரி முதல்வரிடம் சம்பந்தப்பட்ட மாணவி புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஊடகத்தினர் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த கல்லூரி முதல்வர் கணேசன், ‘தமிழ் துறை பேராசிரியர் நாகராஜன், மாணவியிடம் பேசியதாக வெளியான குரல் பதிவு குறித்து திருச்சி மண்டல கல்லூரி இணை இயக்குனரின் அறிவுரையின்படி கல்லூரி உள் புகார் பாதுகாப்பு கமிட்டி மற்றும் மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு என இரு தரப்பும் விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தமிழ் துறை பேராசிரியரின் தவறு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என கூறினார். அதேசமயம் பேராசிரியர் நாகராஜன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்