பரோட்டாவால் வந்த வினை.. இளைஞர் கொடூர கொலை.. தேனியில் பயங்கரம்!
Theni Crime News : தேனி மாவட்டத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். சத்தமாக கொத்து பரோட்டா போட்டதை தட்டிக் கேட்டர் இளைஞர், சமையல்காரர் குத்திக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி, செப்டம்பர் 10 : கொத்து பரோட்டாவுக்காக சத்தமாக பரோட்டா கொத்திய மாஸ்டரை தட்டி கேட்ட இளைஞர் (Theni Crime News) கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர சந்தனகுமார் (28). இவர் தேவதானப்பட்டியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வருகிறார். தற்போது, அவரது மனைவி பாண்டிதேவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 8ஆம் தேதி இரவு தனது பழக்கடைக்கு அருகில் இருந்து ஹோட்டலில் தோசை வாங்க சந்தனகுமார் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு சமையல் தொழிலாளியாக சிவா இருந்துள்ளார்.
பரோட்டாவால் வந்த வினை
சந்தனகுமார் ஹோட்டலுக்கு வந்தபோது, சிவா தோசை கல்லில் கொத்து பரோட்டா செய்து கொண்டிருந்தார். பரோட்டாவை கொத்து கொத்தாக மாற்றுவதற்காக, தோசை கல்லில் தட்டுகளால் சிவா தட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த சந்தனகுமார் எரிச்சல் அடைந்து, சிவாவிடம் ஏன் அதிக சத்தத்துடன் பரேட்டா போடுகிறாய் என கேட்டுள்ளார்.
Also Read : 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை.. திருப்பூரில் ஷாக்..




இதில், இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், கைகலப்பாக மாறி, ஒருவரைக்கொருவர் தாக்கினர். அப்போது, விறகு கட்டையை எடுத்து, சிவாவின் தலைமையில் சந்தனகுமார் தாக்கி உள்ளார். அப்போது, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த சிவாவுக்கு தான் வைத்திருந்த கத்தியால் சந்தனகுமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால், ரத்த வெள்ளத்தில் சந்தன குமார் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஆம்புலன்ஸில் சந்தனகுமாரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும், விறகு கட்டையால் தாக்கப்பட்ட சிவாவுக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read : காதலனுடன் ஹோட்டலில் இருந்த பெண்.. இறுதியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி
முன்னதாக, தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பரோட்டா பார்சல் வாக்குவதில் தகராறு ஏற்பட்டது. 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பரோட்டா மாஸ்டரிடம் இலவசமாக பரோட்டாவை பார்சல் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனை அடுத்து, சிறிது நேரம் கழித்து, பரோட்டா மாஸ்டரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.