Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதலனுடன் ஹோட்டலில் இருந்த பெண்.. இறுதியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி

Chennai Crime News : சென்னையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹோட்டல் அறையில் தங்கி இருந்த அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் ஹோட்டல் அறையிலேயே பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனை பார்த்த காதலன் அவரது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதலனுடன் ஹோட்டலில் இருந்த பெண்.. இறுதியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி
தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
Umabarkavi K
Umabarkavi K | Published: 10 Sep 2025 06:45 AM IST

சென்னை, செப்டம்பர் 10 : சென்னையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலில் தங்கி இருந்த போது, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர் அதே பகுதியில் உள்ள துணிக்கடைசியில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்தவர் ராபி (22). இவர் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அதன்பிறகு அது காதலாக மாறியது. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், 2025 செப்டம்பர் 9ஆம் தேதியான நேற்று காலையில் வேப்பேரியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நீடித்து, மோதலாக மாறியது. அப்போது ராபின் ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறி உள்ளார். மேலும், திரிஷா தங்கி இருந்த அறையை வெளிப்பக்கம் பூட்டியுள்ளார். இதனால், திரிஷா கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்த, அவர் ஹோட்டல் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also Read : பொதுமக்களே உஷார்.. சென்னையில் நவோனியா கொள்ளை கும்பல்!

சென்னையில் காதல் ஜோடி தற்கொலை

இதற்கிடையில், சிறிது நேரம் கழித்து ஹோட்டல் அறைக்கு வந்த ராபின், திரிஷா தூக்கிட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, திரிஷாவின் தோழிக்கு போன் செய்து நடந்ததை கூறி, தானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என ராபின் கூறியிருக்கிறார். அதோடு, திரிஷா தங்கி இருக்கும் அறை எண், ஹோட்டல் விவரத்தையும் கூறியுள்ளார்.

உடனே, அந்த திரிஷாவின் தோழி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஹோட்டலுக்கு போன்ற திரிஷா தங்கி இருக்கும் அறையை பார்க்க சொல்லி உள்ளனர். அப்போது, திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதற்கிடையே, ராபினும் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து, இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Also Read : யூட்யூப் பார்த்து சம்பவம்.. கள்ள நோட்டுகள் அச்சடித்த இளைஞர்!

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் 6 மாதங்களுக்கு முன்பு தான் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதோடு, சமீபத்தில் தான் ராபின் வீட்டிற்கு சென்று, திரிஷாவின் பெற்றோர் பேசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இப்படியான நிலையில், காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)