இன்ஸ்டாவில் பிளாக் செய்த காதலன்.. பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.. சென்னையில் சம்பவம்
Chennai Crime News: சென்னை சேப்பாக்கத்தில் கல்லூரி மாணவி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலன் தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததால், மாணவி இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

சென்னை, செப்டம்பர் 08 : சென்னை சேப்பாக்கத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது. தனது காதலன் இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததால், கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காதல் விவகாரங்களில் தற்கொலை சம்பவங்கள், கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றனர். அண்மையில் கூட, காதல் விவகாரத்தில் நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, காதல் விவகாரத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் கல்லூரி மாணவி காதல் விவகாரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
அதாவது, சென்னை சேப்பாக்கம் மைதானம் எதிரே உள்ள பிரபல விடுதியில் நான்காவது மாடியில் இருந்து 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான நேற்று இரவு மாணவி ஒருவர் குதித்து தற்கொலை முயன்றார். இதனை அறிந்த விடுதி ஊழியர்கள் மாணவியை மீட்டு, ஒமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தற்கொலை முயன்றவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனி ஏஞ்சலினா (25) என்பது தெரியவந்துள்ளது. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
Also Read : நிலத்தகராறு.. பெண்ணின் சேலையை உருவி கடுமையாக தாக்கிய குடும்பத்தினர்!




இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததால் பெண் எடுத்த முடிவு
இவரும், அதே கல்லூரியில் எம்.பி.ஏ முடித்து, தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வரும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் இருந்து வந்துள்ளது. இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, ஆனி ஏஞ்சலினாவை பரத் குமார் இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்துள்ளார்.
Also Read : குலைநடுங்க வைத்த சம்பவம்.. மனைவியை 17 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர்.. பகீர் பின்னணி!
இந்த நிலையில், பெங்களூருவில் பணிபுரியும் பரத் குமாரை சந்தித்து பேசுவதற்காக, ஆனி ஏஞ்சலினா 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான நேற்று காலை கல்லூரி விடுதியில் இருந்து திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கினார். ஆனால், பரத் குமார் சென்னைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. மேலும், அவரை பிளாக் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட கோபத்தில் கல்லூரி மாணவி ஏஜிலினா விடுதியில் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பரத் குமாரை அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.