Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேருந்தில் செயின் திருட்டு.. சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. சென்னையில் சம்பவம்!

Tirupattur Panchayat President Arrest : சென்னையில் பேருந்து பயணித்தின்போது, பயணி ஒருவரிடம் 4 சவரன் நகை திருடிய வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தவைலர் பாரதி என தெரியவந்துள்ளது.

பேருந்தில் செயின் திருட்டு.. சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்..  சென்னையில் சம்பவம்!
கைதான ஊராட்சி மன்ற தலைவர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Sep 2025 06:35 AM IST

சென்னை, செப்டம்பர் 07 : சென்னையில் நகை திருட்டு வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தவைலர் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்தில் பயணித்த போது, பெண் ஒருவரிடம் 4 சவரனை திருடியதாக புகார் எழுந்த நிலையில், கைதாகி உள்ளார். சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி (50). இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் சென்றிருக்கிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பேருந்தில் காஞ்சிபுரத்தில் கோயம்பேடுக்கு திரும்பியுள்ளார்.  நிகழ்ச்சிக்கு செல்லும்போது, தங்க நகைகளை அணிந்திருந்தார்.

ஆனால், கோயம்பேடுக்கு திரும்பும்போது, அவர் 4 சவரன் தங்க நகைகளான செயின், மோதிரம், வளையல் போன்றவற்றை கழற்றி தனது கைப்பையில் வைத்துக் கொண்டார். கோயம்பேட்டில் இறங்கிய வரலட்சுமியை தனது பையை பார்த்தபோது, அதில் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

Also Read : உல்லாசமாக இருக்க அழைத்த பெண்.. நம்பி சென்ற இளைஞருக்கு காத்திருந்த ஷாக்.. ரூ.80,000 கொள்ளையடித்த கும்பல்!

திருட்டு வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

அதில், பெண் ஒருவர் வரலட்சுமி பையில் வைத்திருந்த நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கைதான பெண் பாரதி என்பதும், திமுகவில் பொறுப்பில் இருப்பதும், தற்போது நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை வகித்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், கைதான பாரதி மீது வேலூர், திருப்பத்தூர், விருதம்பட்டு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊராட்சி மன்ற தலைவரே திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : மகளிடம் பேச விடாமல் தடுத்ததால் ஆத்திரம்.. தாயை கொன்ற இளைஞர்!

கண்டனம்


இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ” நீங்கள் திமுகவில் உறுப்பினராகும்போது, ​​கொள்ளையடிப்பதற்கான உரிமம் உங்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுகிறது. கீழே உள்ள படத்தில் வட்டமிடப்பட்ட நபர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திமுக பஞ்சாயத்துத் தலைவர் ஆவார். அவர் ஒரு பேருந்தில் பயணித்த ஒருவரிடமிருந்து 4 சவரன் தங்கத்தை திருடியபோது பிடிபட்டார். பேருந்துகளில் பிக்பாக்கெட் திருடுவது முதல் மாநில கருவூலத்தை சூறையாடுவது வரை, திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது” என்றார்.