தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத குழந்தை பலி.. வீட்டில் விளையாடியபோது விபரீதம்.. ஆவடியில் அதிர்ச்சி!
Chennai Crime News : சென்னை அடுத்த ஆவடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்துள்ளது. இதனை பார்த்த பெற்றோர், உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக கூறினர்.

சென்னை, செப்டம்பர் 05 : சென்னை ஆவடியில் வீட்டில் இருந்து தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தை இறந்ததை அடுத்து, மருத்துவமனையிலேயே பெற்றோர் கதறி அழுதுள்ளனர். குழந்தைகள் கவனமாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இல்லையெனில் சில அசம்பாவதி சம்பவங்கள் நிகழக்கூடும். இந்த நிலையில், ஆவடியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை ஆவடியில் வீட்டில் இருந்து தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சென்னை அடுத்த ஆவடியில் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (26). இவரது மனைவி காந்தாமேரி (25). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு 3 வயதில் லோகேஷ்வரி என்று மகளும், 8 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்களுடன் காந்தாமேரியின் தாய் சொர்ணாவும் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஆவடியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கிருஷ்ணா ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். காந்தாமேரி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 3 வயது மகள் லோகேஷ்வரி அப்பகுதியில் உள்ள பால்வாடியில் படித்து வருகிறார். இவரை தினமுதும் காந்தாமேரி அழைத்து சென்று, வீட்டில் அழைத்து வருவது வழக்கம்.
Also Read : உயரப்போகும் கடல் மட்டம்.. சென்னை, நாகைக்கு காத்திருக்கும் ஆபத்து!
தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத குழந்தை பலி
இந்த நிலையில், 2025 செப்டம்பர் 4ஆம் தேதியான நேற்று மாலை தனது மகள் லோகேஸ்வரியை பால்வாடியில் இருந்து அழைத்து வருவதற்காக காந்தாமேரி சென்றிருக்கிறார். அப்போது, வீட்டில் 8 மாத குழந்தையும், சொர்ணாவும் இருந்துள்ளனர். மூத்த மகள் லோகேஸ்வரியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தபோது, தனது 8 மாத குழந்தை வீட்டின் அறையில் இருந்த தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்து கிடப்பதை கண்டார்.
குழந்தையை பார்த்துக் கொண்டிருந்த சொர்ணா, வீட்டில் தூங்கியபோது, குழந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த காந்தாமேரி அலறி துடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே, உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
Also Read : பூந்தமல்லி டூ சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரூட்… வந்தது கிரீன் சிக்னல்.. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
இதனால் மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இது தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் வாளிக்குள் மூழ்கி 8 மாத குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான், கடலூரில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.