தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை.. பறிபோன உயிர்.. பெற்றோர்களே இந்த தவறை பண்ணாதீங்க!
Cuddalore Crime News : கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் பக்கெட்டில் ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து பறிதாபமாக உயிரிழந்தது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடலூர், செப்டம்பர் 04 : கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் பக்கெட்டில் விழுந்து பெண் குழந்தை (Cuddalore Crime News) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞானசெந்தரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 4ஆம் தேதி ஒன்றரை வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, குழந்தை திடீரென தண்ணீர் பக்கெட்டில் விழுந்துள்ளது.
தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை பலி
இதற்கிடையில், குழந்தை நீண்ட நேரமாக காணவில்லை என பெற்றோர் தேடி அலைந்துள்ளனர். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் பக்கெட்டிவில் குழந்தை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே குழந்தையை மீட்டு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக உயிரிழந்ததாக கூறினர்.
Also Read : ராமநாதபுரத்தில் 2 மாதத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் அமல் – இதுதான் காரணம்!




தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை, எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தையின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுமி, தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : அடிக்கடி ரீல்ஸ் செய்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ஷாக் சம்பவம்.. டெல்லியில் பகீர்!
எனவே, குழந்தைகளை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள் என அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கவனிக்காமல் இருப்பதால் தான் சில அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட, விருதுநகர் மாவட்டத்தில் கீழே கிடந்த பாட்டிலில் இருந்து குளிர்பானத்தை குடித்த சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குளிர்பானத்தை குடித்து மயங்கி விழுந்த நிலையில், உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.