Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.60 கோடியில் போதை மிட்டாய்.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய 2 பேர்!

Chennai Airport Cocaine Seized : சென்னை விமான நிலையில் ரூ.60 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்ட கடத்தி வரப்பட்டுள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இரண்டு பேரை கைது செய்தனர்.

ரூ.60 கோடியில் போதை மிட்டாய்.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய 2 பேர்!
போதைப் பொருள் பறிமுதல்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 03 Sep 2025 09:01 AM

சென்னை, செப்டம்பர் 03 : சென்னை விமான நிலையத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப் பொருள் எத்தியோப்பியாவில் இருந்து சென்னை கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையம் எப்போது பரப்பாகவே இருக்கும். இந்த விமான நிலையத்தில் சோதனைகளும் தீவிரமாக இருந்து வருகிறது. இருப்பினும், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு வருகிறது. நூதன முறையில் பலரும் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இதனையும் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் 2025 செப்டம்பர் 2ஆம் தேதி ரூ.60 கோடி மதிப்பில் போதைப் பொருள் சிக்கியது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எத்தியோப்பியா விமான நிலையத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக ரசயி தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, 2025 செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலை எத்தியோப்பியா விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அதிகாரிகளை கண்காணித்தனர்.

Also Read : இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்.. காதலனை நம்பி சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

ரூ.60 கோடியில் போதை மிட்டாய்

அப்போது, இரண்டு பயணிகள் மீது அதிகாரிகள் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்களை தனியாக அழைத்து சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் கொண்டு வந்த பையில், வெளிநாட்டு சாக்லேட் இருந்துள்ளது. இதனை திறந்து பார்த்ததில், அதில் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்ட கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.

 ரூ.60 கோடி மதிப்பில் 5.618 கிலோ கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். உத்தரகாண்டைச் சேர்ந்த ஹிமான்ஷு ஷா (25) மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சாஹில் எல் அட்ரி (26) என அடையாளம் காணப்பட்ட இருவரும், சுற்றுலா விசாவில் ஆப்பிரிக்க நாட்டிற்கு பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Also Read : சிறுவன் அடித்து கொலை.. பிணத்துடன் 2 நாள் இருந்த குழந்தை… தந்தை செய்த கொடூர செயல்!

திரும்பும் பயணத்தில், டெல்லி அல்லது மும்பை நேரடி விமானத்தில் செல்வதற்கு பதிலாக, சென்னையில் இருந்து செல்ல இருந்தனர். அப்போது, இருவரும் கைதாகின. இவர்கள் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப் பொருள் நெட்வோர்க் உடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைதான இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  போதைப்பொருள் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 1933 என்ற கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.