Karnataka: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்.. காதலனை நம்பி சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி
Karnataka Crime News: மங்களூருவில் இன்ஸ்டாகிராமில் பழகிய நபரால் 17 வயது மாணவிக்கு நேர்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் எனும் நபர், சிறுமியை மதிய உணவுக்கு அழைத்த நிலையில் அவரிடம் வலுக்கட்டாயமாக தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை வீடியோவாக பரப்ப தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா, செப்டம்பர் 3: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்மறையான நிகழ்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொடர்பு சாதனமாக இருக்கும் இத்தகைய சமூக ஊடகங்கள் மோசடி, குற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக மங்களூரு போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ள தகவல்களைக் காணலாம்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்
மங்களூருவைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி பயிலும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கார்த்திக் என்ற நபரை தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இருவரும் ஆன்லைனில் நட்பை வளர்த்த நிலையில் அது காதலாக அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடைசி சனிக்கிழமை அன்று கார்த்திக் அந்தப் பெண்ணை வாலாச்சிலில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மதிய உணவிற்கு அழைத்துள்ளார். அந்த பெண்ணும் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றிருக்கிறார்.
Also Read: மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!




இருவரும் சந்தித்து உணவு உண்ட பிறகு, கார்த்திக் அந்த பெண்ணை அருகிலிருந்த அடையாறு நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்ததாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அதேசமயம் கார்த்தி தனது நண்பர் ராகேஷ் சல்தானாவையும் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள சொல்லி அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு அந்த வீடியோ பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சிக்கிய 7 பேர்
இதற்கிடையில் அங்கிருந்து தப்பி வந்த அந்த பெண் துணிச்சலுடன் நேரடியாக காவல்துறையில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திக், அவரது நண்பர் ராகேஷ் சல்தானா, வீடியோவை பரப்பிய ஐந்து பேர் என 7 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர் மைனர் பெண் என்பதால், போக்சோ மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மங்களூரு காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!
ஆன்லைன் மூலம் காதல்,நட்பு ஆகியவை வளர்த்து முன்பின் தெரியாத நபர்களை சந்திக்க செல்ல வேண்டாம் என வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என இணையவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அவர்களின் செல்போன் பயன்பாட்டில் எப்போதும் கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.