பெற்றோர்களே உஷார்.. குளிர்பானம் குடித்த சிறுவன்.. வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு!
Virudhunagar Crime News : விருதுநகர் மாவட்டத்தில் குளிர்பானத்தை குடித்த 5 சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த பாட்டிலில் இருந்து குளிர்பானத்தை குடித்த சிறுவன் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

விருதுநகர், ஆகஸ்ட் 31 : விருதுநகர் மாவட்டத்தில் கீழே கிடந்த பாட்டிலில் இருந்து குளிர்பானத்தை குடித்த சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குளிர்பானத்தை குடித்து மயங்கி விழுந்த நிலையில், உயிரிழந்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக, தனியாக விளையாடும் போது, கவனிக்க வேண்டும். கவனிக்காமல் இருப்பதால் தான் சில அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதாவது, கீழே கிடந்த பாட்டிலில் இருந்து குளிர்பானத்தை குடித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரச்சாமி (40). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (36). இவர்கள் இரண்டு பேரும் தீப்பெட்டி தொழில்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு 5 வயதில் கோடீசுவரன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் எல்கேஜி படித்து வந்தார். விடுமுறை தினம் என்பதால், சிறுவன் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான நேற்று விளையாடிக் கொண்டிருந்தார். பஞ்சவர்ணம் மற்றும் வீரச்சாமி ஆகியோர் வேலை சென்றிருந்தனர். இதனால், சிறுவன் உறவினர் கண்காணிப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில், சிறுவன் வீட்டிற்கு வெளியே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென வலாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே சிறுவனை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.




Also Read : வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள்.. தாசில்தார் இடமாற்றம்.. போலீஸ் வழக்குப்பதிவு!
குளிர்பானம் குடித்த 5 வயது சிறுவன் பலி
மேலும், இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, மருத்துமனைக்கு வந்த பெற்றோர்கள் அழுதுள்ளனர். இதற்கிடையில், சிறுவனை பரிசோதனை மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுவனின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, சிறுவன் கோடீசுவரன் விளையாட்டிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த ஒரு பாட்டிலில் இருந்து குளிர்பானத்தை குடித்துள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு, சிறிது நேரத்திலேயே சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : விநாயகர் சிலை ஊர்வலம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க!
எனவே, குழந்தைகளை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். அண்மையில் கூட, வேலூரில் அருங்கம்புல் பறிக்க சென்ற 13 வயது சிறுவனை விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.