வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள்.. தாசில்தார் இடமாற்றம்.. போலீஸ் வழக்குப்பதிவு!
Ungaludan Stalin Petition : சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட சில மனுக்கள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்காக திருப்புவனம் தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 7 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

சிவகங்கை, ஆகஸ்ட் 31 : சிவகங்கை மாவட்டத்தில் ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் (Ungaludan Stalin Petition) மற்றும் பிற மனுக்கள் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை முன்வைத்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திருப்புவனம் பேலீசார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருப்புவனம் தாசில்தாரை இடமாற்றம் செய்யவும், தாசில்தார் அலுவலகத்தில் அலட்சியமாக இருந்த ஏழு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் பல்வேறு சேவைகளுக்கு இந்த முகாம்களில் மனுக்கள் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். கல்வி உதவித் தொகை, மகளிர் உதவித் தொகை, அடிப்படை வசதிக்ள, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனு கொடுக்கலாம்.
வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள்
மனு அளித்தால் 41 நாட்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை ஆகிய கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 2025 ஆகஸ்ட் 21,22ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கோரிக்கைளை மனுவாக அளித்திருந்தனர்.
Also Read : விநாயகர் சிலை ஊர்வலம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க!




இந்த நிலையில் தான், திருப்புவனத்தில் இருந்து மடப்புரம் செல்லும் வழியில் உள்ள வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மற்றும் பிற மனுக்கள் போடப்பட்டிருக்கிறது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதற்கு பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதற்கிடையில், சம்பத்தப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், மனுக்களை மீட்டு எடுத்துச் சென்றனர்.
திருப்புவனம் தாசில்தார் இடமாற்றம்
இதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தவும் வலியுறுத்தினர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திருப்புவனம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கே. பொற்கொடி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
Also Read : 1000 மரங்கள் நட்டால் இறுதி சடங்கில் அரசு மரியாதை – மரங்களின் மாநாட்டில் சீமான் பேச்சு
மேலும், இதுகுறித்து ஆட்சியர் பொற்கொடி கூறுகையில், “வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனுக்களின் 13 நகல்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இருந்து பெறப்பட்டது. இதில் ஏற்கனவே, 6 மனுக்களில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த மனுக்களும் இருந்தன. திருப்புவனம் தாசில்தாரை இடமாற்றம் செய்யவும், தாசில்தார் அலுவலகத்தில் அலட்சியமாக இருந்த ஏழு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் திருமதி பொற்கொடி உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.